நம்முடைய ஆரோக்கியம் மேம்பட புகையிலைக்கு அடுத்தபடியாக நிறுத்த வேண்டியது அதிகப்படியான உப்பை உணவில் சேர்ப்பது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாஸ்ட் புட் உணவுகள், டப்பாக்களில் பாடம் செய்யப்பட்ட உணவுகள் இவற்றில் எல்லாம் உப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது.
அதிகப்படியான உப்பு உடம்பில் சேர்வதால் சிறுநீரக கோளாறு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று வரிசையாக நோய்கள் தாக்க ஆரம்பித்து விடும். எனவே நம் உடம்பில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்ற கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம்.
ஆரஞ்சு ஜூஸ்
அதிகமாக உப்பு சேர்க்கப்பட்ட உணவை சிறிது சாப்பிட்டாலே கை கால்கள் நீர்தேக்கம் ஏற்பட ஆரம்பித்து விடும். அதிகப்படியான சோடியம் இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலே போதும் உடம்பில் தங்கியுள்ள உப்பை அலசி வெளியேற்றி விடும்.
கீரைகள்
காய்கறிகளிலயே தலைசிறந்த ஒன்று என்றால் அது கீரைகள் தான். இதில் ஏராளமான சத்துக்கள், பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதுவும் உடம்பில் உள்ள உப்பின் அளவை குறைக்கிறது.
வாழைப்பழம்
தினமும் இரவு இரண்டு வாழைப்பழம் சாப்பிடாமல் நாம் தூங்க மாட்டோம். காரணம் இதில் அதிகமான அளவு பொட்டாசியம் உள்ளது. இதுவும் சோடியம் பொட்டாசியம் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதனால் உடம்பில் உப்பின் அளவு குறைக்கப்படுகிறது.
உலர்ந்த பழங்கள்
உலர்ந்த பழங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகையைச் சார்ந்தது. உலர்ந்த திராட்சை பழங்கள், ஆப்ரிகாட், கொடி முந்திரி போன்றவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஒரு கைப்பிடியளவு சாப்பிட்டு வாருங்கள் உடம்பில் உள்ள உப்புச் சத்து குறைந்து விடும்.
பீன்ஸ்
பீன்ஸ் பொட்டாசியம் நிறைந்த காயாகும். எனவே இதை சாப்பிடும் போது உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைத்து சோடியம் பொட்டாசியம் சமநிலை அடைகிறது.