கொரோனா, டெல்டா வைரஸ், ஒமிக்ரான், என அடுத்தடுத்து நம்மைப் பதம்பார்த்து வரும் வைரஸ் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, உணவில் கவனம் செலுத்த வேண்டியதுதான் இப்போதையத் தேவை.
ஆட்டம் காட்டும் கொரோனா (Corona showing the game)
கடந்த 2ஆண்டுகளாகக் கொரோனா வைரஸ் தொற்று நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. வெவ்வெறு பெயர்களில் உருமாறிவரும் இந்த வைரஸ் தற்போது ஒமிக்ரானாக வலம் வருகிறது.
புதுப்புதுப் பெயர்களில் உருமாறும்போது, அதன் வீரியமும், பரவும் தீவிரமும் மாறுகிறுது. அதிரடியான வேகத்தில் பரவும் வைரஸின் ஆக்டோபஸ் கரங்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது ஒருபுறம் என்றால், மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள், அந்தத் தொற்றில் இருந்து விடுபட உணவில் கவனத் செலுத்துவதும் அவசியமே.
தற்போது பரவிரும் ஒமிக்ரான் வைரஸின் தீவிரத்தன்மை குறைவாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினாலும், நாம் எச்சரிக்கையை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் இந்த புதிய ஒமிக்ரான் (omicron) மாறுபாட்டின் தொற்று பரவும் வேகம் டெல்டா வகையை விட மிக அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு மட்டுமே உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் என்றால், அந்த நோயிலிருந்து விரைவில் விடுபட கீழ்கண்ட உணவுகளைச் அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பச்சைக் காய்கறிகள் (Green vegetables)
-
பச்சைக் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் , அவற்றில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் பி12 நிறைந்துள்ளது.
-
அதேபோல உலர்ந்தப் பழங்களில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது என்பதால் அதையும் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
-
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
புரதம் நிறைந்த உணவுகள் (Protein rich foods)
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே புரதம் நிறைந்த முட்டை, மீன், டோஃபு மற்றும் பருப்பு வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். சில முழு தானியங்களையும் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி (Vitamin D)
வைட்டமின் டியை உணவில் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும், நோயாளி விரைவில் குணமடைவார். ஏனெனில் கோவிட் நோயாளிகளுக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது என்பதை சமீபத்திய ஆய்வு உறுதிசெய்திருக்கிறது.
மசாலா பொருட்கள் (Spices)
கோவிட் வைரஸால் வாயின் சுவை மறைந்தால், உணவில் பூண்டு, இஞ்சி, கிராம்பு, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் அனைத்து வகையான மசாலாப் பொருட்களையும் பயன்படுத்துங்கள். அதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, நம் சுவை உணர்வும் சீராகும்.
மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!