சில மக்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஆனால் அப்படி செய்வதால், மெட்டபாலிச அளவு குறைந்து, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல், உடல் எடையைக் குறைப்பதே கஷ்டமாகிவிடும். அதுமட்டுமின்றி, இப்படி காலை உணவைத் தவிர்த்தால், பின் பசியின் அளவு அதிகரித்து, பின் மதிய வேளையில் நன்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு, இதனால் உடலில் கலோரிகள் அதிகரித்து, உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்க ஆரம்பமாகும்.
இட்லி, ரவா இட்லி, தோசை மற்றும் சாம்பார் இவற்றில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது மிகவும் ஆரோக்கியமானது.
பிரட்/முட்டை அல்லது பிரட்/பால்
இவற்றில் ஏதேனும் ஒன்றை தவறாமல் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் கிடைக்கும்.
சப்பாத்தி மற்றும் பருப்பு
காலையில் சப்பாத்திக்கு தால் செய்து சாப்பிட்டால், அதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உடலின் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைக்கும்.
பொங்கல்/உப்புமா காலை உணவாக பொங்கல் அல்லது உப்புமாவை எடுத்து வருவதும் சிறப்பான வழி. இவற்றிலும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
ராகி/கேழ்வரகு கூழ் அக்காலத்தில் நம் முன்னோர்கள் காலையில் ராகி கூழ் அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் திடமான உடலுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆகவே நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால் காலையில் ராகி கூழ் சாப்பிட்டு வாருங்கள்.
பாலுடன் ஓட்ஸ்/கார்ன் ப்ளேக்ஸ் காலையில் ஒரு பௌல் பாலுடன் ஓட்ஸ்/கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிட்டு வருவதும் மிகவும் நல்லது.