Health & Lifestyle

Saturday, 26 March 2022 09:03 PM , by: Elavarse Sivakumar

இயற்கை நமக்கு அளித்த அற்புதக் கொடைகளுள் முதன்மையானது தேன். வயிற்றுக்கு நண்பன் என வருணிக்கப்படும் தேன், மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதனால்தான் பழங்காலம் தொட்டே, மருத்துவம் முதல், ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் தேனைத் தவறாதுப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாகக் குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். ஏனெனில், தேன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்த முடியும்.

70 வகையான வைட்டமின் சத்துக்களைத் தேன் தன்னுள் இயற்கையாகவேப் புதைத்து வைத்திருக்கிறது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான். எனவே நாம் வாங்கும் தேன், சுத்தமானத் தேன்தான் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.

எண்ணற்ற நன்மைகள் 

  • விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

  • குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

  • கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

    வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

  • இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

  • தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

  • தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

  • மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

  • தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால்

    மூட்டுகள் வலிக்காது. தேயவும் தேயாது.

  • தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

  • தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.இப்படித் தேனின் மருத்துவக் குணங்களைப் பட்டிலிட்டுக்கொண்டே செல்லலாம்.

மேலும் படிக்க...

SSC : மத்திய அரசு வேலை- கல்வித்தகுதி10-ம் வகுப்பு தேர்ச்சி!

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)