நிறங்களும் ஊட்டச்சத்தும்
நம்முடைய உணவில் உள்ள ஒவ்வொரு நிறங்களுக்கு என்றும் சில குணங்கள் இருப்பது போது, சில குறிப்பிட்ட நிறங்களைக் கொண்ட உணவுப் பொருள்கள் ஒரே மாதிரியான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இது நினைத்துப் பார்க்கவே நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். அதிலும் குறிப்பாக பழங்களில் இந்த தன்மை அதிகமாகவே உண்டு. நம்முடைய உடலுக்குச் சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது என்றால், அதற்கு சில குறிப்பிட்ட நிறங்களில் உள்ள பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் இந்த ஊட்டச்சத்து தேவையை நம்மால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
நோய் தீர்க்கும் நிறங்கள்
அதேபோன்று தான் ஒவ்வொரு குறிப்பிட்ட நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பஙை்களுடைய குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கு ஏற்றபடி, சில நோய்களைத் தீர்க்கின்ற ஆற்றலும் உண்டு. அது பற்றி தெரிந்து வைத்திருந்தாலே நாம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திட முடியும்.
மஞ்சள் நிறப் பழங்கள்
மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்களில் மிக அதிக அளவில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் ஆகியவை அதிக அளவில் இருக்கும். இந்த மஞ்சள் நிறப் பழங்களைச் சாப்பிடுவதால் எலு்புகள் வலிமையடையும். மன அழுத்தம் குறையும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். ரத்தம் சுத்தீகரிப்பு செய்யப்படும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.
சிவப்பு பழங்கள்
செக்கச் சிவந்த பழங்கள் நம்முடைய உடலுக்கு வலிமையைத் தரக்கூடியவை. இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள அணுக்களை (ஹீமோகுளோபின்) செல்களை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கண் பார்வை தெளிவடையும். நம்முடைய உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இந்த சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. குறிப்பாக, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி போன்ற வைட்டமின் சி அதிகம் கொண்ட சிவப்பு நிற பழங்களில் பிளவனாய்டுகள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாலைக்கண் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். இதய நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டவை.
ஆரஞ்சு நிற பழங்கள்
ஆரஞ்சு நிறங்களில் (ஆரஞ்சு மட்டுமல்லாது மற்ற பழங்களும்) உள்ள பழங்களில் வைட்டமின் சியும் பொட்டாசியமும் அதிகமாக இருக்கின்றது. அதனால் இது ரத்தத்தை சுத்தப்படுத்தி எலும்புகளை வலுவாக்குகிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலும் இதற்கு அதிகமாகவே உண்டு.
பச்சை நிற பழங்கள்
காய்கறிகள், கீரைகள், பழங்கள் என பச்சை நிறத்தில் உள்ள உணவுப் பொருள்களின் அருமைப் பற்றி நமக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிற ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றங்களில் பங்கெடுக்கிறது. டைபாய்டு போன்ற வைரஸ், பாக்டீரியா தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகிற ஆற்றல் கொண்டவை தான் பச்சை நிற பழங்கள்.
பிரௌன் நிற பழங்கள்
பிரௌன் நிறப் பழங்கள் அந்த கலருக்காகவே நாம் பெரிதாக விரும்புவதில்லை. ஆனால் அவற்றில் மிக அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது அல்சரைப் போக்கி, குடல், வாய் மற்றும் வயிற்றுப் புண்களைச் சரிசெய்கிறது.
ஊதா வண்ண பழங்கள்
ஊதா வண்ணங்களில் உள்ள பழங்கள் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் தான் இருக்கின்றன. அவை ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நீண்ட நாள் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த ஊதா நிற பழங்கள் இருக்கின்றன. ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்து என்று கூட இதை நாம் சொல்லலாம்.
எப்போது சாப்பிட வேண்டும்?
பொதுவாக சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் அல்லது சாப்பிடும் போது பழங்கள் சாப்பிடுகின்ற பழக்கங்கள் இருக்கும். அது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்று தங்களுக்குள்ளே பெருமிதமும் கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அது ஆரோக்கியமான உணவுப்பழக்கம் கிடையாது. நாம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவோ அல்லது ஒரு மணி நேரம் கழித்தோ தான் பழங்கள் சாப்பிட வேண்டும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
நிறைய பேர் ஜூஸ் தான் உடலுக்கு வலுவூட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா பழச்சாறை விடவும் பழத்தை அப்படியே சாப்பிடுவதில் தான் முழுமையான ஊட்டச்சத்தை நம்மால் பெற முடியும். குறிப்பாக, பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால், சாறாகக் குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவதன் மூலம் தான் பெற முடியும்.