Health & Lifestyle

Sunday, 10 April 2022 10:06 PM , by: Elavarse Sivakumar

எந்தவொரு நோயையும் எதிர்த்துப் போராட பழங்கள் உதவும். ஏனெனில், பழங்களில் அத்தகைய சத்துக்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, சில பழங்கள் சில நோய்களுக்கு அருமருந்து. அந்த வகையில் நீரிழிவு நோயில் இருந்து நம்மைப் பாதுகாக்க சில பழங்கள் உள்ளன. இருப்பினும் முறையற்ற உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, மக்கள் பல்வேறு நோய்களுக்கு பலியாகின்றனர். நீரிழிவு நோயும் அத்தகைய நோய்களில் ஒன்றாகும்.

சர்க்கரை நோய் என்பது இன்றைய காலத்தில் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இருப்பினும், உங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த நோயை எதிர்த்துப் போராடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் 5 பழங்கள் உள்ளன.

ஆரஞ்சு

நீரிழிவு நோயாளிகளுக்கும் ஆரஞ்சுப் பழம் சிறந்த மருந்து. ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதன் காரணமாகவே இது நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவுகிறது.


கொய்யா

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். கொய்யா, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும். கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நாவல் பழம்

நீரிழிவு நோயாளிகளுக்கும் நாவல் பழம் நீண்டகால நன்மை தருவதாக உள்ளன. நாவல் பழம் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கிவி

அனைவருக்கும் தெரியும், கிவி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடுவதால் பலன் கிடைக்கும். கிவியில் வைட்டமின் ஏ, வைட்டமின்-சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன, இவை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)