கொரோனாத் தொற்று காரணமாக, வீட்டையே அலுலகமாக மாற்றிக்கொண்டதன் விளைவாக, ஐ.டி உள்ளிட்ட அலுவலகங்கள் எக்கச்சக்க லாபத்தை ஈட்டிவிட்டன. ஊழியர்களோ உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, எடைகூடி பல இன்னல்களைத் தவிர்த்து வருகின்றனர்.
பல்வேறு இருதய நோய்களுக்கு மூல காரணமாக உள்ள கொழுப்பு, இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமான செல் உருவாக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது. இருப்பினும், தேவைக்கு அதிகமாக இருந்தால், அது உங்கள் முழு உடலிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். , உயர் இரத்த அழுத்தம், மார்பு வலி, சிக்கலான உணர்வு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அதீத சோர்வு ஆகியவை அதிக கொலஸ்ட்ராலின் சில அறிகுறிகளாகும்.
என்னதான் வருமானம் வந்தாலும், ஆரோக்கியமே நம் வாழ்க்கைக்கு அச்சாரம் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எண்ணுபவரா நீங்கள்? இந்தத் தகவல் உங்களுக்குக்குதான். உடலில் உள்ள கொலஸ்ட்ராலை எரிக்க உடற்பயிற்சி மட்டுமல்ல, நீங்கள் சாப்பிடும் பழங்கள்கூட உதவும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். அதிலும் இந்த 5 பழங்களை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள். உடல் எடை காணாமல் போகும்.
தக்காளி
பழமாக இருந்தாலும் சரி, தக்காளி காயாக இருந்தாலும் சரி, வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய தக்காளி உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பப்பாளி
நார்ச்சத்து நிறைந்துள்ள பப்பாளி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த பழங்கள் தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அவகோடா
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்களில் அவகோடா பழமும் ஒன்று. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அவகோடா, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுடன், எல்டிஎல் மற்றும் எச்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
ஆப்பிள்
ஆப்பிள் சுவையானது மட்டுமல்ல, இந்தப் பழம் தோல் மற்றும் முடிக்கும், இதயத்திற்கும் நல்லது. எல்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமற்ற அளவைக் குறைத்து, பல நோய்கள் நம் இதயத்தை சேதப்படுத்தாமல் தடுக்கிறது.
மேலும் படிக்க...