Health & Lifestyle

Thursday, 25 October 2018 11:39 AM

ஊட்டச்சத்துக்களை பொருத்த வரையில் இரண்டிலும் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. ஆனால் ஒரு காய்கறி வகைக்கும் பழத்திற்கும் சிறிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

தாவரவியல் வகைப்பாடு

என்பது காய்கறிகள் மற்றும் பழங்களின் வடிவம், செயல்பாடு இவற்றை கொண்டு பிரிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் பூக்கள் பழங்களை உருவாக்கவும், பழங்களின் விதைகள் மறுபடியும் ஒரு தாவரத்தை உருவாக்கவும் உதவுகிறது. இதுவே காய்கறிகளை எடுத்து கொண்டால் ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலைகள் மற்ற தாவர பாகங்களும் காய்கறிகளை உருவாக்குகின்றன. காரட், பீட்ரூட், கீரைகள் போன்றவை காய்கறிகளாகும்.

சமையல் வகைப்பாடு

சமையலை பொருத்த வரை காய்கறிகளும் பழங்களும் அதன் தன்மை பொருத்து பயன்படுத்துகின்றனர். பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டு காணப்படுவதால் டிசர்ட், பாஸ்ட்ரி, ஸ்மூத்தி, ஜாம் ஏன் ஸ்நாக்ஸ் ஆக கூட பயன்படுத்தி கொள்கின்றனர். காய்கறிகள் அதன் பசுமையான தன்மை, கசப்பு சுவை காரணத்தாலும் பழங்களை மாதிரி மென்மையாக இல்லாமல் கடினமாக இருப்பதாலும் சமைத்தோ அல்லது பச்சையாகவோ நாம் இதை சமையலில் பயன்படுத்தி வருகிறோம். சாலட், காய்கறி பொரியல் போன்று செய்கின்றோம்.

தக்காளி பழமா? அல்லது காயா?

எல்லா பழங்களும் ஒரு விதை கொண்டோ அல்லது ஏகப்பட்ட விதைகள் கொண்டோ இருக்கும். பழம் என்பது தாவரத்தின் பூக்களிலிருந்து உருவாகிறது. அதன்படி பார்த்தால் தக்காளி மஞ்சள் நிற பூக்களிலிருந்து உருவாகி நிறைய விதைகளை தன்னுள் கொண்டுள்ளது. விவசாய தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நவீன காலத்தில் ஏன் விதைகளே இல்லாத தக்காளி பழமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் தாவரவியல் வகைப்பாடு படி தக்காளி ஒரு பழம் என கருதப்படுகிறது.

ஆய்வு

தக்காளி பழமா? காயா என்ற குழப்பம் அதன் பயன்பாட்டிலிருந்து எழும்புகிறது. அப்படி பார்க்கையில் தக்காளி பெரும்பாலும் காய்கறிகளுடன் சேர்ந்து சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே அது விஞ்ஞான ரீதியாக பழமாக இருந்தால் கூட பயன்பாட்டின் கீழ் காய்கறி என்ற பெயரை பெற்றிருக்கிறது.

1893 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தக்காளி இறக்குமதியாளர்கள் தக்காளி மீதான காய்கறி கட்டண உயர்வை தவிர்ப்பதற்காக அதை பழ வகையாக கருத வேண்டும் என வாதிட்டனர். ஆனால் இந்த வழக்கில், தக்காளி ஒரு பழம் என அதன் தாவரவியல் வகைப்படுத்தலுக்கு பதிலாக அதன் சமையல் பயன்பாடுகள் அடிப்படையில் அது ஒரு காய்கறி என வகைப்படுத்தப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தக்காளி மட்டும் இந்த மாதிரியான குழப்பங்களை சந்திக்கவில்லை.

பழ வகை சேர்ந்த காய்கறிகள்

நாம் பயன்படுத்தும் நிறைய காய்கறிகள் உண்மையில் பழ வகையைச் சார்ந்தவை.

உதாரணமாக,

  • வெள்ளரிக்காய்
  • பூசணிக்காய்,
  • சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து காய்கள்
  • பட்டாணி வகைகள்
  • மிளகாய்
  • கத்தரிக்காய்
  • வெண்டைக்காய்

போன்றவை உண்மையில் பழங்கள். ஆனால் சமையலில் காய்கறிகளாக பயன்படுத்தப்படுகிறது.



எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)