நல்ல கொழுப்புகள்
நல்ல கொழுப்பு உணவுகளான, ஆலிவ் ஆயில், வெண்ணெய் பழம், ஆளிவிதைகள், மீன், நட்ஸ் போன்றவை தீய கொழுப்பை அகற்ற உதவுகிறது. குறிப்பாக எல்.டி. எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கடல்மீன்
உணவு எனப்படும் "சீ ஃபுட்ஸ்", கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த உணவாகும். குறிப்பாக மீன்களில் இருக்கும் ஒமேகா 3 சத்து இதற்கு உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இயற்கையான முறைகளில் மிக எளிதாக தீயக் கொழுப்புகளை அகற்ற உதவுவது நார்ச்சத்து (Fiber) உணவுகள் தான். பழங்கள், காய்கறிகள், தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் ஏதேனும் ஓர் காய்கறி அல்லது பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஓட்ஸ்
அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இந்த ஓட்ஸ். தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
ப்ளூ பெர்ரி
ப்ளூ பெர்ரியில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், தீயக் கொழுப்பின் மூலம் ஏற்படும் சேதங்களை தடுக்க உதவுகிறது.