இந்தியர்களின் சமையலைப் பொருத்தஅளவு, காரத்திற்கும் உப்புக்கும் முக்கிய இடம் உண்டு. குறிப்பாக கொஞ்சம் தூக்கலான காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால், உணவில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவேத் தோன்றும்.
உணவிற்கு நறுமணத்தை மட்டுமல்ல, கூடுதல் சுவையையும் கொடுக்கிறது பச்சைமிளகாய்.
ஆய்வில் தகவல் (Research Report)
இதுதொடர்பாக ஹார்வேர்ட் பொது சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் (Harvard School of Public Health ) நடத்திய ஆய்வில், மனிதர்களின் ஆயுளுக்கும், பச்சைமிளகாயிற்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
பச்சை மிளகாயின் காரத்தை விரும்பாதவர்களில் 14 சதவீதம் பேருக்கு ஆயுள் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயுளைக் கூட்டும் இந்தப் பச்சைமிளகாய் பல்வேறு மருத்துவப் பயன்களையும் தன்னுள் பதுக்கி வைத்துள்ளது. அதில் சிலவற்றைப் பட்டியலிடுகிறோம்.
Antioxidants
இவற்றில் ஏன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருப்பதால், உடலில் அணுக்களில் ஏற்படும் சேதம்(Cell damage), புற்றுநோய், இதயநோய் போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
உடலில் கொழுப்பைக் குறைக்கும் பணியை செய்யும் பச்சைமிளகாயில் உள்ள வைட்டமின்கள் A,B,C ஆகியவை நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து, நோய் தொற்றில் இருந்து காக்கின்றன.
ஜீரணத்தைத் தூண்டும் (Digestion)
ஜீரணத்தைத் தூண்டும், நார்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதால், இரைப்பையை சுத்தம் செய்து, மலச்சிக்கலை நீக்குகிறது.
உடல் எடை குறைப்பு (Weight Loss)
அளவுக்கு அதிகமாக உடலில் தங்கும் கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. தினமும் பச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது, வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி உடல் எடை குறைவதை உறுதி செய்கிறது.
சரும பராமரிப்பு (Skin benefits)
பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் C சரும ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்து, பொலிவுடன் வைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் E தோலில் மாசு மருவை நீக்கி, என்றும் இளமையுடன் இருக்க உதவி புரிகிறது.
வலி நிவாரணி (Pain relief)
இதில் இடம்பெற்றுள்ள anti-inflammatory properties உடலில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக ஆந்திரிட்டீஸ் போன்ற நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் பச்சை மிளகாய் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நீரழிவுநோய் (Diabetes)
நீரழிவுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவில், பச்சைமிளகாயை சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது ( Haemoglobin)
பச்சை மிளகாயில் உள்ள இரும்புச்சத்து, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவி, ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது. இதன் மூலம் ரத்த சோகையில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
கண் ஆரோக்கியம் (Eye Health)
இதில் இடம்பெற்றுள்ள பீட்டா கரோட்டீன் (Beta-carotene) கண்களுக்கு ஆரோக்கியத்தையும் நல்ல பார்வையையும் தருகிறது.
கூந்தல் ஆரோக்கியம் (Healthy Hair)
பச்சைமிளகாயில் உள்ள சிலிக்கான்கள் (Silicon) தலையில் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
இத்தனை பலன்தரும் பச்சைமிளகாயை அளவுக்கு அதிகமாக உணவில் எடுத்துக்கொண்டால், வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற நோய்கள் வரும் என்பதையும் நாம் அனைவரும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!