பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்தது என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, பலவிதப் பக்கவிளைவுகளும் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
பச்சை காய்கறிகள் (Green vegetables)
கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள்.
அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை என்றாலும், சிலக் காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகளின் பட்டியல் இதோ!
காலிஃபிளவர் (வாயுத் தொல்லை) (Cauliflower (gas nuisance)
முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிஃபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக பலரும் சாலட்டுகளில் இந்தக் காய்கறிகளை சேர்த்து பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும்.காலிஃபிளவரில், வயிற்றில் கரையாத ஒருவகை சர்க்கரை இருக்கிறது. சமைத்து உட்கொண்டால் மட்டுமே அந்தவகை சர்க்கரை எளிதாகக் கரையும்.
கத்திரிக்காய்
கத்திரிக்காயைப் பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைச்சுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும்.குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதும் உடலுக்கு நல்லதல்ல.
பீட்ரூட்
பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள். பலர் பீட்ரூட்டை சாறு எடுத்துப் பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும்.பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும்.
காளான்கள்
வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாகக் காளான்கள் கருதப்படுகின்றன. இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். அத்தகையச் சூழ்நிலையில், காளான்களை முழுமையாகச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
கேரட்
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளக் கேரட்டை சாப்பிடும்போது, அதன் அளவை கவனிப்பது மிக மிக முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால், அதில் உள்ள பீட்டா உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும். இதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.
எனவே அளவோடுச் சாப்பிடுவதைக் கட்டாயமாக்கிக்கொள்வோம்.
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!