சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 1 November, 2021 2:13 PM IST
Guava nectar for diabetics in winter!
Guava nectar for diabetics in winter!

கொய்யா நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. குளிர்காலத்தின் போது சந்தைகளில் அதிகம் காணப்படும். கொய்யா பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். அதன் முழு பழமும் உண்ணக்கூடியது.  குளிர்காலத்தில் கொய்யா பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கொய்யா மட்டுமின்றி, கொய்யா இலையிலும் மருத்துவ குணம் உள்ளது. கொய்யாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு.

எடையைக் கட்டுப்படுத்துவதில் இது மிகவும் நல்லது. இந்த பழத்தை சாப்பிடுவதால் சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். கொய்யா உடலில் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது, அதே போல் குளிர்காலத்தில் சளி மற்றும் இருமலில் இருந்து விடுவிக்கிறது. கொய்யா குளிர்காலத்தில் குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கொய்யாவின் சில நன்மைகளை இங்கே கூறுகிறோம்.

கொய்யாவின் நன்மைகள்

சர்க்கரை அளவை குறைக்கிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சில ஆய்வுகள் கூறுவதாவது கொய்யாவை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். கொய்யா இலையை போட்டு டீ குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

கொய்யாவில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது தவிர, பல வகையான வைட்டமின்களும் இதில் காணப்படுகின்றன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் இதய பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. கொய்யாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

மாதவிடாய் வலியை குறைக்கிறது

பெண்களின் மாதவிடாய் வலியைக் குறைக்க கொய்யா மற்றும் கொய்யா இலைகள் உதவிகரமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளையும் குறைக்கிறது.

கொய்யா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

வானிலை மாறும்போது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், கொய்யாவில் உள்ள பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. கொய்யா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆற்றலையும் தருகிறது.

செரிமானம் நன்றாக இருக்கும்

மற்ற பழங்களை விட கொய்யாவில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. கொய்யா விதைகள் வாயு மற்றும் அஜீரண பிரச்சனையை போக்க உதவுகிறது.

மேலும் படிக்க:

கொய்யாப்பழத்தில் விதைகளை குறைத்து தரத்தை உயர்த்தும் வழி!

English Summary: Guava nectar for diabetics in winter!
Published on: 01 November 2021, 02:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now