எலும்புகள் என்றாலே, அத்துடன் சேர்த்து கால்சியம் என்ற வார்த்தையை எப்போதுமே உபயோகிப்பது வழக்கம். ஆனால், நம்முடைய உடலில் உள்ள எலும்புகள் கால்சியம் பற்றாக்குறையினால் மட்டும் பலவீனமாக ஆவதில்லை. அதற்கு பதிலாக தவறானப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் அவை பலவீனமடைகின்றன.
அதாவது, பல சமயங்களில் நாம் செய்யும் தவறுகளால், உடலில் இருக்கும் எலும்புகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன. எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.
மருந்து கிடையாது
அதிலும், ஆஸ்டியோபோரோசிஸ் நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும். அதனால் அதிக எச்சரிக்கை தேவை.
புகை
முதலாவதாக, எலும்புகள் வலுவிழக்கப் புகைபிடிப்பதும் ஒரு முக்கிய காரணம். தொடர்ச்சியாகப் புகைபிடித்தால், அதன் பாதிப்பு எலும்புகளில் காணப்படும். புகைபிடிப்பதால், உடலால் புதிய ஆரோக்கியமான எலும்பு திசுக்களை எளிதில் உருவாக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், புகைபிடிப்பவர்களின் எலும்புகள் உடைந்து போகும் ஆபத்து அதிகமாக உள்ளது.
அதிக உப்பு
இது தவிர, அதிக உப்பை உட்கொள்வதும் எலும்புகளை பாதிக்கிறது. உண்மையில், அதிக உப்பை உட்கொள்வதன் மூலம் உடல் உள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
ஃபாஸ்ட் ஃபுட்
உணவில் போதுமான ஊட்ட சத்துக்களை கிடைக்காமல் போவதும் பெரிய தவறு. டீன் ஏஜினர் பலருக்கு துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் எலும்புகள் பலவீனமடைகின்றன. இது தவிர, போதுமான தூக்கம் இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிவி பார்ப்பது
தொடர்ந்து டிவி பார்க்கும் போது, உங்கள் உடலை அதிகம் அசைப்பதில்லை, அதனால் உங்கள் எலும்புகள் பலவீனமடையும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!