வெற்றிலை (Betel Leaf) என்பது நமது தமிழ் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். மங்களத்தின் அடையாளமாக இருந்தாலும், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. குறிப்பாக செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்வாக கூறப்படுகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்றாகும், அந்த வகையில் இதை வைத்து சட்னி செய்வது எப்படி? அதுவும் இது சளி புடுத்தவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்? இதன் செய்முறை என்ன? கீழே காணுங்கள்...
கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கமாகும். ஆனால் காலப்போக்கில், அது காணாமல் போனது என்றாலும். இப்பொழுது நாம் சளித்தொல்லை கால்சியம் சத்து ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய, இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
தேவையான பொருட்கள் (Required things)
வெற்றிலை - 5
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
மிளகாய் - 4
பொரிகடலை - 3ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு
நல்ல எண்ணெய் - 2 ஸ்பூன்
புளி - 1 துண்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/4ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை (Recipe)
வாணலியில் மிளகு, சீரகம் இட்டு வறுத்து கொள்ளவும். அதன் பின்னர், மிக்ஸியில் வறுத்த மிளகு, சீரகம், தேங்காய், பொரிகடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு உளுந்து போட்டு, தாளித்து சேர்த்து கொள்ளவும். வெற்றிலை சட்னி தயார். இந்த சட்னி வெற்றிலையின் குணத்துடனும், மற்ற பொருட்களின் சுவையுடனும், உங்களுக்கு சுவையானதாக கிடைக்கும்.
எனென்றால், இதில் வெற்றிலையுடன், மிளகு சேர்த்திருப்பது சளிக்கு, நல்ல எதிர்ப்பு சக்தியை அளிக்கும். மேலும் துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலை மாலை என இரு வேலைகள் குடித்து வர, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும். அதே நேரம், நல்ல நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க: