Health & Lifestyle

Monday, 08 October 2018 04:56 PM

எல்லா நேரத்திலும் விரும்பக் கூடிய மற்றும் அனைவராலும் வாங்கக்கூடிய பழம். வாழைப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழமாகும். இது பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மை கொண்டது.  வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது. இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைப்பொருட்கள் உள்ளது. வாழைப்பழம் சில உடல்நலக்கேடுகள் ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அவற்றை மேற்கொள்ள உதவுகிறது.

மனஅழுத்தம் - வாழைப்பழத்தில் ஒருவகை புரதம் உள்ளது. நம் உடல் இப்புரதத்தினை செரடோனன் எனும் வேதிப்பொருளாக மாற்றுகிறது. இப்பொருள் மனதை தளர்வாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ப்ரிமென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் - வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிப்படுத்துகிறது. இது ஒருவரின் மனநிலையினை மாற்ற உதவுகிறது.

இரத்த சோகை - வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே இது இரத்தசோகை நோயை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது.

இரத்த அழுத்தம் - வாழைப்பழத்தில் அதிகளவில் பொட்டாசியம் மற்றும் தாதுப் பொருளும், குறைந்த அளவில் உப்பும் உள்ளது. எனவே இரத்த அழுத்தத்தை குறைக்க இது உதவுகிறது.

மலச்சிக்கல் - வாழைப்பழத்தில் உள்ள அதிக நார் சத்தானது மலச்சிக்கல் பிரச்சினையை மேற்கொள்ள உதவுகிறது.

நெஞ்செரிச்சல் - வாழைப்பழத்தில் இயற்கையாகவே நம் உடலில் உள்ள அமிலத்தை சமமாக்கும் தன்மை உள்ளது. இது நெஞ்செரிச்சலிலிருந்து நல்ல நிவாரணம் தர உதவுகிறது.

அல்சர் எனப்படும் வயிற்று மற்றும் குடல்புண் - வாழைப்பழம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், இது குடலில் ஏற்படும் கோளாறுகளுக்கு, நல்ல உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் அதிக அமிலத்தன்மையைச் சரிசெய்வதோடு, புண் ஏற்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பு சுவரை ஏற்படுத்துகிறது.

ஸ்ட்ரோக் - வாழைப்பழத்தினை உணவில் ஒருபகுதியாக தவறாமல் எடுத்துக் கொள்வதினால் அதிகளவு (40 சதம்) ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தினை தவிர்க்கிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)