15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 December, 2020 9:44 PM IST

சிலருக்கு ப்ளாக் டீ மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் உலகில் ஏராளமானோர் ப்ளாக் டீயைத் தான் விரும்பி குடிக்கிறார்கள். தினமும் ஒரு டம்ளர் ப்ளாக் டீயைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

நீரிழிவு:

ப்ளாக் டீயை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், நீரிழிவு வருவதற்கான அபாயம் குறையும்.

செரிமானம்:

ப்ளாக் டீயில் டேனின்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. எனவே உங்கள் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட தினமும் ஒரு டம்ளர் ப்ளாக் டீ குடிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

புற்றுநோய்:

ப்ளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் இருக்கும். எனவே இதனை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், குறிப்பிட்ட புற்றுநோய் உருவாவதைத் தடுக்கலாம்.

இதய ஆரோக்கியம் மேம்படும்:

ப்ளாக் டீயை தொடர்ந்து பருகி வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பல் ஆரோக்கியம்:

ப்ளாக் டீ பற்களில் ப்ளேக் உருவாக்கத்தைத் தடுக்கும் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும்.

வலிமையான எலும்புகள்:

ப்ளாக் டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், எலும்புகள் வலிமையடைவதோடு, அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்களால் ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

எடை குறையும்:

உடல் எடையால் கஷ்டப்படுபவர்கள், ப்ளாக் டீயை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள குறைவான சோடியம் மற்றும் கலோரியால் உடல் பருமனடைவது குறையும்

சருமத்திற்கு நல்லது:

ப்ளாக் டீயில் வைட்டமின் பி2, சி, ஈ, கனிமச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க் போன்றவையும், பாலிஃபீனால்கள் மற்றும் டேனின் போன்ற சருமத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

தலைமுடிக்கு நல்லது:

ப்ளாக் டீயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் காப்ஃபைன் போன்ற தலைமுடிக்கு தேவையான உட்பொருட்கள் உள்ளன.

English Summary: Health benefits of drinking Black Tea
Published on: 23 January 2019, 05:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now