இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 November, 2018 5:42 PM IST

சீரான இரத்த அழுத்தத்திற்கு

காரட்டில் காணப்படும் அதிக அளவு பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டம் ஏற்பட காரணமாகிறது.

சீரான அழுத்தத்துடன் இரத்தம் பாய்வதால் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. எனவே காரட்டினை உண்டு சீரான இரத்த அழுத்தத்தைப் பெறலாம்.

இதய நோய் ஏற்படாமல் இருக்க

ஒரு நாளைக்கு 200 கிராம் வீதம் தொடர்ந்து மூன்று வாரங்கள் பச்சையாக கேரட்டினை உண்பவர்களின் கொலஸ்ட்ரால் அளவானது 11 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகின்றன. எனவே காரட்டினை உண்டு உடலில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுக்குள் வைத்து இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் காரட்டினை உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே காரட்டினை உண்டு இதய நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கலாம்.

கல்லீரல் பாதுகாப்பிற்கு

காரட்டில் உள்ள விட்டமின் ஏ-வானது கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவினை குறைக்கவும் விட்டமின் ஏ உதவுகிறது.

குடலில் உள்ள கழிவுகளை காரட்டில் உள்ள நார்ச்சத்து விரைந்து நீக்குகிறது. எனவே காரட்டினை உண்டு கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளைப் பாதுகாக்கலாம்.

செரிமானம் நன்கு நடைபெற

காரட்டில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுவதோடு உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை குடல் உறிஞ்சவும் ஊக்குவிக்கிறது. மேலும் நார்ச்சத்தானது உடலில் உள்ள நச்சுக்களை கழிவாகவும் வெளியேற்றுகிறது.

இதனால் குடல் மற்றும் உணவுப்பாதைகளில் தொற்று நோய், புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் நார்ச்சத்து பாதுகாக்கிறது. மேலும் மலச்சிக்கலுக்கும் நார்ச்சத்து சிறந்த தீர்வாகும். எனவே காரட்டினை உணவில் அடிக்கடி சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறுவதுடன் மலச்சிக்கலுக்கும் தீர்வு காணலாம்.

புற்றுநோயைத் தடுக்க

காரட்டில் உள்ள பீட்டா கரோடீன்கள் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. தினமும் 1.7 மில்லிகிராம் முதல் 2.7 மில்லிகிராம் வரை பீட்டா கரோடீனை உட்கொள்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் குறைவாக உள்ளதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.

நார்ச்சத்து அதிகம் உள்ள காரட்டினை உண்பதால் குடல்புற்று நோய் ஏற்படுவதற்கான கூறுகள் 20 சதவீதம் குறைவாக உள்ளதாக மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் பீட்டா கரோடீனை அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே காரட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

கண்களின் நலத்திற்கு

இக்காயில் பீட்டா கரோடீன் அதிக அளவு உள்ளது. பீட்டா கரோடீனானது கல்லீரலில் விட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது.

விட்டமின் ஏ-யானது கண்ணில் உள்ள ரெக்டினாவினால் இரவுப் பார்வைக்குத் தேவைப்படும் ஊதாநிறமியான ரோடாப்சின்னாக மாற்றப்படுகிறது. எனவே கண்களின் பார்வைத் திறனை பாதுகாக்க கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பீட்டா கரோடீன்கள் கண் அழற்சி நோய், கிளைக்கோமா மற்றும் கண்புரை நோய் ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

பீட்டா கரோடீன்கள் உள்ள உணவினை அடிக்கடி உண்பவர்கள் கண்நோய்கள் இன்றி சிறந்த பார்வைத்திறனைப் பெற்றுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே கேரட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து நலமான பார்வையைப் பெறலாம்.

 சருமப் பாதுகாப்பிற்கு

காரட்டில் உள்ள விட்டமின் ஏ-வானது சருமங்களில் சுருக்கங்கள், வறட்சி, ஈரமின்மை ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. காரட்டினை அரைத்து சருமத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் பொலிவான சருமத்தினைப் பெறலாம்.

பற்கள் மற்றும் ஈறுகள் பாதுகாப்பிற்கு

காரட்டினை கடித்து உண்ணும்போது அவை பற்களுக்கு இடையே உள்ள உணவு துகள்களை அகற்றி சுத்தம் செய்கிறது. மேலும் இதனை உண்ணும்போது உமிழ்நீர் சுரப்பினை அதிகரிக்கிறது.

காரத்தன்மை உடைய உமிழ்நீர் வாயில் பாக்டீரியாவின் செயல்பாட்டினை தடை செய்கிறது. இதனால் பற்சிதைவு, ஈறுகள் பாதிப்பு ஆகியவை தடுக்கப்படுகிறது. எனவே காரட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதுகாக்கலாம்.

English Summary: Health benefits of eating Carrot
Published on: 20 November 2018, 05:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now