Health & Lifestyle

Wednesday, 21 November 2018 04:36 PM , by: KJ Staff

Credit : Dinakaran

பொன்னாங்கண்ணி கீரையில் (Ponnankanni keerai) பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச் சத்து (Iron), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ், புரதம் , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி - பல‌ மருத்துவக் குணங்களை (Medical Benefits) கொண்டது.

பலன்கள்

  • கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
  • சருமத்துக்கு மிகவும் நல்லது.
  • மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
  • ரத்தத்தைச் (Blood) சுத்தீகரிக்கும்
  • உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
  • வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
  • இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு.

பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லையே என நினைக்கக் கூடாது. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள், குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் வரை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது உடலில் சார்ந்து நோய் (Disease) நொடிகளை ஓட ஓட விரட்டும்.

மேலும் படிக்க

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)