மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைமரமும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்.
நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.
- வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
- பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
- நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
- நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே. மேலும் நுங்கை சாப்பிட்டடன் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்தசோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.
- நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு.