காய்கறிகள் என்றாலே நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடியது. அதிலும் பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது.
இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
பட்டாணி
இது பார்ப்பதற்கு வடிவில் சிறியதாக இருந்தாலும் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இது பருப்பு வகையை சார்ந்தது. இந்த பச்சை பட்டாணியை பாடம் பண்ணி உலர வைத்தோ அல்லது ப்ரஷ்ஷாகக் கூட வழங்குகின்றனர். மேலும் இதில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
பசியை தீர்க்கும்
இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியை கொடுக்கிறது. பசி மற்றும் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. சீரணத்தை மெதுவாக்கி பசியை போக்குகிறது.
இதய ஆரோக்கியம்
மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இது இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் நார்ச்சத்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சீரண சக்திக்கு உதவுதல்
பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.