Health & Lifestyle

Tuesday, 22 January 2019 06:01 PM

நிலக்கடலை எண்ணெயில் மகத்தான பல நன்மைகளும் அடங்கியுள்ளன. போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம் இந்த எண்ணெய்.

தினமும் பெண்கள் இந்த எண்ணெய் எடுத்துக் கொண்டால் மகப்பேறு சிரமமின்றி இருக்கும்.

நீரழிவு நோயை தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

இதயம் காக்கும்:  நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

கொழுப்பை குறைக்கும். நிலக்கடலையில் உள்ள ஒமேகா-6 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.

கருப்பை கோளாறுக்கு: இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 மில்லி கடலை எண்ணெய்யில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

  • கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
  • நார்சத்து- 9 மி.கி.
  • கரையும் (நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
  • புரதம்- 25 மி.கி.
  • ட்ரிப்டோபான்- 0.24 கி.
  • திரியோனின் – 0.85 கி
  • ஐசோலூசின் – 0.85 மி.கி.
  • லூசின் – 1.625 மி.கி.
  • லைசின் – 0.901 கி
  • குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
  • கிளைசின்- 1.512 கி
  • விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
  • கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
  • காப்பர் – 11.44 மி.கி.
  • இரும்புச்சத்து – 4.58 மி.கி.
  • மெக்னீசியம் – 168.00 மி.கி.
  • மேங்கனீஸ் – 1.934 மி.கி.
  • பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
  • பொட்டாசியம் – 705.00 மி.கி.
  • சோடியம் – 18.00 மி.கி.
  • துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
  • தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)