முருங்கைக்காய் மட்டுமல்லாமல், முருங்கை மரத்திலுள்ள ஒவ்வொரு பாகமும் மருத்துவகுணங்கள் கொண்டவை.
வலிமையான எலும்புகள்:
முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை ஜூஸாகவோ அல்லது பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து,குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்:
முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஆன்டி-பயாடிக் ஏஜென்ட்டாகவும் செயல்படும். அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப் அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்:
முருங்கைக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்படும், இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.
சுவாச பிரச்சனைகளை குணமாக்கும்:
உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது:
கர்ப்பிணிகள் முருங்கையை உணவில் சேர்த்து வந்தால், பிரசவம் எளிதாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நடைபெறும். இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் முகிகிய காரணம். மேலம் இதனை பெண்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
நோய்த்தொற்றுகள்:
முருங்கைக்காயின் இலைகள் மற்றும் பூக்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இவை தொண்டை மற்றும் சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ-ராடிக்கல்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
செரிமானத்திற்கு உதவும்:
முருங்கைக்காய் மற்றும் இலைகளில், செரிமானத்திற்கு தேவையான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் தான் செரிமான மண்டலத்தில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்பை உடைத்து எளிதாக வெளியேற்றும்.