இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 February, 2021 3:33 PM IST

துவரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

  • துவரையில் பி-த்தொகுப்பு விட்டமின்களான பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுக்கள்) அதிகளவும், பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), சி, கே, சோலைன் ஆகியவையும் காணப்படுகின்றன.

  • இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.

  • மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.

 மருத்துவப் பண்புகள் (Medicinal properties)

இரத்த அழுத்தத்தை சீராக்க (regulate blood pressure)

  • துவரையில் உள்ள பொட்டாசியமானது இரத்த குழாய் விரிப்பானாக‌ச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கிறது. எனவே துவரையை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கலாம்.

  • துவரையானது ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்தினைக் கொண்டுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.

  • காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரையை உண்டு ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறலாம்.

அனீமியாவைத் தடுக்க (To prevent anemia)

  • ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் அனீமியா மற்றும் பிறப்புக்குறைபாடுகள் தோன்றலாம். துவரையானது அபரிதமான ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே இதனை உண்டு அனீமியாவை விரட்டலாம்.

எதிர்ப்பு அழற்சி பண்புகள் (Anti-inflammatory properties)

  • துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி பண்பினையும் கொண்டுள்ளன. இப்பண்பானது துவரையின் இலைகள், பயறு, பருப்பு எல்லாவற்றிலும் காணப்படுகின்றது.

 உடல்எடை குறைய  (Weight Loss)

  • துவரையானது குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்புச்சத்தினைக் கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை நீண்ட நேரம் ஏற்படுத்துவதுடன் உடல்வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.

  • துவரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடைசெய்கின்றது.

ஆற்றலைப் பெற (To gain energy)

  • துவரையில் உள்ள விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) மற்றும் பி3 (நியாசின்) போன்றவை கார்போஹைட்ரேட்டின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

  • கொழுப்பு ஆற்றல் சேமிப்பதைத் தடுத்து ஆற்றலின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

  • வறண்ட பகுதிகளில் வேலைசெய்பவர்கள் ஆற்றலை விரைவில் இழந்து விடுவர். அவர்களுக்கு துவரை நல்ல பலனைக் கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி (immunity)

  • துவரையில் உள்ள விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

இதயநலம் (Heart health)

  • துவரையில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரை உண்டு இதயநலத்தை மேம்படுத்தலாம்.

செரிமானத்தை சீராக்க (To regulate digestion)

  • துவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றம் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

English Summary: Health benefits of Red gram
Published on: 08 November 2018, 04:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now