பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியைச் சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை சிறிதளவு உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.
பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்து பூசி வந்தால் தொழு நோய் புண்கள் விரைவில் ஆறும்.
பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும். பிறகு, இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து தலைமுடிக்குத் தேய்த்து 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வருவதால் இளநரை தடை செய்யப்படுவதோடு, தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.
பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வருவதால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.
பீர்க்கங்கொடியின் இலையைக் கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து நாள்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறி விடும்.
பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிக்கட்டிகள் குணமாகும்.
பீர்க்கங்காய் சாறு எடுத்து இனிப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்தத்தால் வந்த காய்ச்சல் தணிந்து போகும்.
பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வருவதால் அதிலுள்ள பீட்டா கரோட்டீன் சத்து கிடைக்கப்பெற்று கண் பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.
பீர்க்கங்காயை உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல் சளி தொல்லை, இருமலால் அவதி படுவோருக்கு நல்ல மருந்து. ரத்த சோகையில் இருந்து விடுபட பீர்க்கங்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும். பீர்க்கங்காய் சுவாச கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.