Health benefits of Sabja Seeds
உடல் சூட்டைத் தணிப்பதில் சப்ஜா விதைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே தான் கோடை காலங்களில் ரோஸ்மில்க், பாதாம் மில்க் உள்ளிட்ட பானங்களில் இந்த விதைகள் கலக்கப்படுகின்றன. இந்த விதைகள் நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சப்ஜா விதைகளின் பயன்கள் (Benefits of Sabja Seeds)
- சப்ஜா விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர நாளடைவில் மலச்சிக்கல் நீங்கும்.
- குடல் ஆரோக்கியம் மேம்படும்.
- சப்ஜா விதைகளில் கலோரிகள் மிகக் குறைவு. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடற்பருமன் குறையும்.
- சப்ஜா விதைகள் நீரிழிவைத் தடுக்க உதவும்.
- ஒரு ஸ்பூன் விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
- இந்த விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பது மட்டுமல்லாமல் ரத்தசோகையையும் தடுக்கும்.
- உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், இரவில் ஊறவைத்த சப்ஜா விதைகளை மறுநாள் காலை சாப்பிட்டுவர உணவுக் குழாய் பிரச்னைகள் நீங்கும்.
- மாதவிலக்கின்போது பெண்களுக்கு உண்டாகும் அடிவயிற்று வலி நீங்க உதவும்.
மேலும் படிக்க
குரங்கு அம்மை பரவல் உலகிற்கான எச்சரிக்கை மணி: உலக சுகாதார நிறுவனம்!