உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும் அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.
இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக (Antioxidant) விளங்குகிறது. சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை படிப்படியாக நீங்கும்.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால் எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த உடலிலும் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால் எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.
K.Sakthipriya
Krishi Jagran