இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 November, 2018 5:02 PM IST

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற

வாழைக்காயில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. இதனால் நோய் எதிர்பாற்றல் இல்லாமல் ஏற்படும் சளி, வைரஸ் தொற்றுதல்களிலிருந்து நம்மை இக்காய் பாதுகாக்கிறது.

இதய நலத்திற்கு

வாழைக்காயில் காணப்படும் பொட்டாசியம் உடலில் உள்ள சோடியத்தின் அளவினை சமன் செய்து உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

இக்காயில் காணப்படும் பி6 (பைரிடாக்ஸின்) இதய நோயினைத் தோற்றுவிக்கும் ஹோமோசைஸ்டீன் அளவினைக் குறைக்கிறது.

இக்காயில் காணப்படும் நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

நல்ல செரிமானத்திற்கு

வாழைக்காயில் காணப்படும் நார்ச்சத்தானது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை ஒன்று திரட்டி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

மேலும் உடலானது உணவில் உள்ள ஊட்டச்சத்தினை முழுவதும் உறிஞ்ச உதவி செய்கிறது. ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தினை வழங்கும் உணவில் இக்காய் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது.

 ஆரோக்கியமான உடல் எடை இழப்பிற்கு

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் கார்போஹைட்ரேட்டை தவிர்க்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்தாகும். உடல் எடை குறைப்பிற்கு நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட்டை எடுத்துக் கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட்டுடன் கூடிய நார்ச்சத்து உணவு செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. மேலும் சிறிதளவு உண்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. இதனால் இடைவேளை உணவு என்பது அவசியமற்றதாகிறது.

வாழைக்காயானது கார்போஹைட்ரேட்டுடன் கூடிய நார்ச்சத்தினைக் கொண்டுள்ளது. எனவே ஆரோக்கியமான உடல் எடை இழப்பினை வேண்டுவோர் இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மூளையின் புத்துணர்ச்சிக்கு

வாழைக்காயில் உள்ள வைட்டமின் பி6 (பைரிடாக்ஸின்) மூளையினை நன்கு செயல்படச் செய்யும் ஹார்மோன்களான செரோடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் ஆகியவற்றை நன்கு சுரக்கச் செய்கிறது. இந்த ஹார்மோன்கள் தூக்கத்தை வரவழைத்து மூளையினை நன்கு செயல்படச் செய்கிறது.

 கண்கள், சரும பாதுகாப்பிற்கு

வாழைக்காயானது அதிகளவு வைட்டமின் ஏ, பி6 (பைரிடாக்ஸின்) போன்றவை கொண்டுள்ளது. இந்த வைட்டமின்கள் கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் போன்றவை ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

மேலும் இந்த வைட்டமின்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதை தடைசெய்கிறது. சருமத்தில் வறட்சி ஏற்படாமலும், அதிக எண்ணெய் பசை இல்லாமலும் இவை பாதுகாக்கின்றன.

 வாழைக்காயினை தேர்வு செய்யும் முறை

வாழைக்காயினைத் தேர்வு செய்யும்போது ஒரே சீரான நிறத்தில், கனமானதாக, விறைப்பானதாக இருப்பவற்றை தேர்வு செய்யவும்.

பழுத்த, மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள், நோய் தொற்று இருப்பவற்றைத் தடை செய்யவும்.

அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் இக்காயினை வைத்திருந்து பயன்படுத்தவும்.

English Summary: Health benefits of Unripened banana in food
Published on: 27 November 2018, 04:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now