பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 November, 2019 6:03 PM IST

காலநிலை அறிந்து நாம் உணவு உட்க்கொண்டால் நோயின்றி வாழலாம் என்பது முன்னோர்கள் வாக்கு. பொதுவாக குளிர் காலம் மற்றும் பனிக்காலங்களில் அதிக அளவிலான காய்கறிகள், கீரைகள் மற்றும்  பழங்கள் கிடைக்கும். உணவியல் வல்லுநர்களும் இதே கருத்தினை முன் வைக்கிறார்கள். கீழே கொடுக்கப் பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது உடலின் தட்ப வெப்பநிலை சமன் செய்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான ஆற்றல் தருகிறது.

கண்ணுக்கு ஒளி தரும் காரட்

கிழங்கு வகையான காரட் உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது. கரோட்டின் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் அதிகம் கொண்டுள்ளது. மேலும் வைட்டமின் பி, சி, டி, ஈ மற்றும் கே போன்ற உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. கால்சியம் பெக்டேட் காரட்டில் அதிகம் உள்ளது. இது பனிக்காலத்தில் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

நார்ச்சத்து டர்னிப்

கிழங்குவகை காய்கறியான டர்னிப்பில் போலேட், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் உள்ளன. இந்த டர்னிப் வகை காய்கறியை பனிக் காலத்தில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

முள்ளங்கி

பனிக்காலத்தில் முள்ளங்கி  அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இந்த காய்கறியில் பொட்டாசியம், போலிக் அமிலம் அதிகம் உள்ளது. இதனை சாலட் போலவும் சாப்பிடலாம்.

பாலக்கீரை

சத்து நிறைந்த உணவாக கொண்டாடப்படும் பாலக்கீரையில் ப்ளேவனாய்டுகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் பனிக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.

வெந்தையக்கீரை

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. இது நார்ச்சத்து அதிகம் கொண்டது. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுகிறது. வெந்தைய சப்பாத்தி பனிக்காலத்திற்கு ஏற்ற உணவு.

கடுகு இலைகள்

பனிக் காலத்தில் கடுகு செடியில் இருந்து கிடைக்கும் இலைக்கள் மிகவும் சத்து நிறைந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். பச்சை கடுகில் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் வைட்டமின்கள், தாது உப்புகள், கரோட்டீன்கள் அதிகம் உள்ளன.

பச்சை பட்டாணி

பச்சைப்பட்டாணியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஊட்டச்சத்தினை அதிகரிக்கும். இது வயிறு புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊட்டம் தரும் ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள். அந்த அளவிற்கு பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது பயன்தரக்கூடியது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.

அதிரடி ஆரஞ்சு

சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Health Tips: Don’t Skip these Fruits and Vegetables for this winter: Add plenty of nutrients and flavors in your plate
Published on: 27 December 2018, 04:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now