சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி (Stevia rebaudiana) என்பது சிடீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக் கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (candy leaf), இனிப்பு இலை (sweet leaf) மற்றும் சர்க்கரை இலை (sugar leaf) எனப் பல பிராந்தியப் பெயரால் அழைக்கப்படுகின்றது. இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) என்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புத் தன்மைக்கு முக்கியக் காரணங்களாகும்.
இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது. ஆனாலும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை. இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதுதான் இதன் சிறப்பு.
`சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில், சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்றாக உள்ளது.
நமது கலாசாரத்தில் அறுசுவை உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோயாளிகள் அறுசுவையையும் சுவைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த இனிப்புச் சுவையை சர்க்கரை நோயாளிகள் ருசிக்க முடியாது. எனவே இவர்கள் சீனித்துளசியை சர்கரைக்கு பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம். சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை உள்ளது. மேலும் ஜீரோ கலோரி, ஜீரோ கார்போஹைட்ரேட் உள்ளது.
இனிப்பு துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.இரத்த அழுத்தத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்க செய்வதில்லை.
2.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (0 Calories) மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.
3.ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
4.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர் பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்கரைக்கு பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.
- வயிற்றுப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணி.
- உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
7.இதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.