இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 June, 2019 4:49 PM IST

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பத நீரை நன்கு காய்ச்சி அதிலிருந்து கிடைக்கப்படுவதே கருப்பட்டி. இதனை பனை  வெல்லம் என்றும் கூறுவர். காய்ச்சப்பட்ட பத நீரை அச்சுகளில் ஊற்றி நன்கு காய வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதே கருப்பட்டி ஆகும். இதில் அடங்கியுள்ள எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

கருப்பட்டியில் உள்ள நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி: கருப்பட்டியில் இரும்பு சத்து, கால்சியம் அதிகளவில் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எளிதில் நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் அடிக்கடி நோய்வாய் படுவது குறையும் மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நீரிழிவு (சர்க்கரை நோய்): கருப்பட்டி ரத்தத்தை சுத்தம் வல்லது. அதோடு உடலில் உள்ள இன்சுலின் அளவை சீர் செய்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு  தினமும் சிறிய  அளவிலான  கருப்பட்டியினை  கொடுத்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதோடு, அடிக்கடி ஏற்படும் சீறுநீர் போக்கு குறையும். 

கர்ப்பபை வலுவடையும்:  பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த கருப்பட்டி சிறந்து மருந்தாகும். குறிப்பாக பருவம் அடைந்த பெண் பிள்ளைகளுக்கு தினமும் கருப்பட்டியுடன் உளுந்தை சேர்த்து களி செய்து கொடுத்தால் கர்ப்பபை பலம் பெறுவதுடன்  இடுப்பு எலும்புகளும் உறுதி பெறும்.

உடல் குளுமை : கருப்பட்டியில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை இருப்பதால், உடலில் தோன்றும் உஷ்ணம் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்து வெப்ப தன்மையை சீராக  வைக்கிறது.

காபி,டி: வெள்ளை சர்க்கரை வைட்டமின் பி, மற்றும் கால்சியம் சத்தை உறுஞ்சி உடலுக்கு தேவையான பலத்த நீக்குகிறது. இதை தவிர்க்கும் வகையில் நாம் தினமும் பருகும் காபி, டி இவற்றில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து பருகி வந்தால் உடலுக்கு சிறந்த ஆரோக்கியம் கிடைக்கிறது.

பசியின்மை: பசியின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு சீரகத்தை நன்கு வறுத்து அத்துடன் சுக்கு சேர்த்து பொடி செய்து, கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை பிரச்சனை நீங்கி  நன்கு உணவு உட்கொள்ள உதவும் மற்றும் செரிமானம் எளிதில் ஏற்படும்.

இரும்பல், சளி தொல்லை: சுக்கு, மிளகு இரண்டையும் நன்கு பொடி செய்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்ல் மற்றும் சளி தொல்லையிலிருந்து விடுபடலம். முக்கியமாக இதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அடிக்கடி இந்த தொல்லை ஏற்படுவது கட்டுப்படும்.

இதையும் படிக்க: உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு  இரத்த  அணுக்களை அதிகரிக்கச்செய்து , இரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை இந்த கருப்பட்டியில் உள்ளது. கருப்பட்டி உடலில் சேரும் கெட்ட நச்சுத்தன்மையை நீக்கி உடலை தூய்மையாக வைக்கிறது.

 

k.sakthipriya

krishijagran

English Summary: healthy benefits of palm jaggery: palm tree organic avoid white sugar
Published on: 20 May 2019, 03:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now