Health & Lifestyle

Saturday, 24 July 2021 09:33 AM , by: R. Balakrishnan

Credit : IndiaMart

தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை (Lotus Seed) இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள்.

தாமரை விதை

தாமரையின் விதை மிருதுவாக இருக்கும். சுவை என்று பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் ஒருவிதமான தனி வாசனை இருக்கும். வெறுமனே சாப்பிடலாம் அல்லது அவலில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது போல இதிலும் செய்து சாப்பிடலாம். தால் மக்கானி (தாமரை விதை பாயசம்) வட இந்தியாவில் பிரபலம். தாமரை விதையினை க்ரேவி (Gravy) போலவும் செய்து சாப்பிடலாம்.

பயன்கள்

  • தாமரை விதையில் கலோரி குறைவாகவும், புரதம் (Proteins) அதிகமாகவும் உள்ளது.
  • இதனை உப்பு சேர்க்காமல் நீரிழிவு நோயாளிகளும் ரத்த அழுத்தம் உடையவர்களும் மாலை நேரங்களில் நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம்.
  • உடலுக்கும் நல்லது.
  • எந்த பின்விளைவுகளும் இருக்காது.
  • சிறுநீரகத்தின் திசுக்களை பாதுகாக்கும்.
  • உடல் எடையை குறைக்கும்.
  • இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் குறைக்கும்.
  • சீக்கிரம் வயதாவதை தடுக்கும்.
  • பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தும்.
  • வட இந்தியாவில் பாலூட்டும் தாய்மார்களின் உணவில் இது கட்டாயம் இடம்பெறும். தால் மக்கானி என்று சொல்லும் இதனை அவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!

பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)