Health & Lifestyle

Tuesday, 11 October 2022 08:33 AM , by: Elavarse Sivakumar

ஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதனால், நீரிழிவு நோய் மற்றும் Heart Attack க்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சில்லுன்னு ஒரு குளியல்

குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது. நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு. ஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும், நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாவதையும் தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.

கலோரிகளை எரிக்க

இது தொடர்பாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிகையில் 104 ஆய்வுகளின் பகுப்பாய்வு இடம் பெற்றுள்ளது. அதில் குளிர்ந்த நீரில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரத்த நாளங்கள்

குளிர்ந்த நீர் பல்வேறு சுகாதார நன்மைகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரில் நீச்சல் அடிக்கும்போது நீரின் சுழற்சி வெளிப்பாடும், உடல் அசைவும் ஒருங்கே அமையப்பெறுகிறது. அந்த சமயத்தில் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள ரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. சரும திசுக்களில் ரத்தம் ஆழமாக வேரூன்றி செல்வதால் ரத்த ஓட்டமும் மேம்படுகிறது.

சோர்வு நீங்கும்

விளையாட்டு வீரர்கள் போட்டி அல்லது பயிற்சிக்கு பிறகு தசைகளில் வலியை எதிர்கொள்வார்கள். சோர்வும் எட்டிப்பார்க்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவது உடல் வலியை குறைக்கவும் உதவும். தசைகளை தளர்வடைய செய்து சோர்வையும் போக்கும்.

இதய கோளாறு

நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு. குளிர் காலங்களில் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் வீரர்களின் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்திருப்பதும், நீச்சல் வீரர்கள் அல்லாதவர்களின் உடலில் இன்சுலின் செறிவுகள் குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

அதே வேளையில் பனிக்கட்டிகள் சூழ்ந்த கடும் குளிர் நீரில் நீராடுவது ஆபத்தானது. உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வது இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் கொழுப்பின் அளவை குறைக்க சிரமப்படுபவர்கள் குளிர்ந்த நீரில் நீராட முயற்சிக்கலாம்.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)