இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 May, 2022 12:43 PM IST
Prevent food wastage....

உணவு அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. கூடுதலாக, மனிதர்களுக்கு வித்தியாசமாகவும் சாப்பிடுவதற்கு பல்வேறு மெனுக்கள் உள்ளன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முயல்வோர் ஏராளம், மறுபுறம் கைநிறைய உணவுக்காக காத்திருக்கும் நிலையும் உள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் உணவுக்காக போராடும், ஒரே நாடு இந்தியா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கை 2021 இன் படி, ஒவ்வொரு இந்தியரும் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணடிக்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்களை மனதில் கொண்டு, உணவை வீணாக்குவதில் கவனம் செலுத்துவதும், அதைக் குறைக்க உதவும் ஆதாரங்களைத் தேடுவதும் காலத்தின் தேவையாகிவிட்டது.

உங்களிடம் ஏற்கனவே உள்ளதைப் பயன்படுத்தவும்: மளிகைப் பொருட்களை வாங்க ஷாப்பிங் செல்லும் முன், நீங்கள் ஏற்கனவே வாங்கி பிரிட்ஜ் மற்றும் ஸ்டோர் ரூமில் சேமித்து வைத்திருக்கும் பொருட்களைப் பாருங்கள். நீங்கள் எதைப் பயன்படுத்தலாம் என்பதைப் பட்டியலிட்டு, அதற்கேற்ப மெனுவைத் திட்டமிடுங்கள்.

ஏற்கனவே ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் பொருட்களை உடனடியாக சமைத்து முடிக்க திட்டமிடுவது பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் நல்லது.

ஃப்ரீசரை அதிகமாகப் பயன்படுத்துங்கள்: உங்களின் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரீசர் உதவுகிறது. மயோனைசு முதல் பச்சை இறைச்சி வரை எதையும் உறைய வைத்து பாதுகாக்கலாம்.

அதே நேரத்தில் உறைந்த உணவுகளை சரியான நேரத்தில் சமைக்க மறக்காதீர்கள். எஞ்சிய உணவுகள் வீணாகாமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் சேமியுங்கள், அது குப்பையில் போகும் நிலை வராது.

சுவையான சாஸ்கள் செய்யுங்கள்: கீரைகள், காய்கறிகள் என ஏதேனும் மிச்சம் இருந்தால், உடனே தூக்கி எறியாமல் நீங்களே வெவ்வேறு சாஸ்களை செய்யலாம். இதனால் உணவு வீணாவது தடுக்கப்படுவதுடன், கடைகளில் அதிக விலைக்கு சாஸ்களை வாங்க வேண்டிய தேவையும் தவிர்க்கப்படுகிறது. எனவே இதைச் செய்வதன் மூலம், சேமிப்பில் ஒரே கல்லில் இரண்டு பழங்களை பறிக்கலாம்.

தண்டுகளுடன் தானியங்களை இணைக்கவும்: உங்களுக்குப் பிடித்த கீரை மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்திய பிறகு அதன் தண்டுகளைத் தூக்கி எறிய வேண்டாம். அத்துடன் அரிசி, குயினோவா, குதிரைவாலி, தினை ஆகியவற்றை தானியங்களுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்துடன், சிறிது பணமும் மிச்சமாகும்.

எஞ்சியிருக்கும் காய்கறிகளைப் பயன்படுத்தவும்: காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் பல நாட்கள் சேமித்து சாப்பிட்டால், அவை ஊட்டச்சத்துக்களை இழப்பதோடு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே குளிர்சாதனப்பெட்டியில் இருக்கும் காய்கறிகளை முடிந்தவரை பரிசோதித்து, கூடிய விரைவில் சமைத்து சாப்பிட திட்டமிடுங்கள்.

சூப்பர் மார்க்கெட் vs ஆன்லைன் ஷாப்பிங்: சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங் என்பது பணத்தைச் சேமிப்பதற்கும், அதிகமாக வாங்குவதைத் தவிர்ப்பதற்கும் சிறந்தது. ஏனென்றால், ஆன்லைன் ஷாப்பிங்கில் கண்ணில் படும் அனைத்துப் பொருட்களுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து அதிக பொருட்களை வாங்கி குவிக்கும் தந்திரம் இருக்கிறது.

எனவே ஆன்லைனில் ஷாப்பிங் செய்யாமல் நேரடியாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது.

வீட்டுத் தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடுதல்: வீட்டைச் சுற்றி அல்லது மொட்டை மாடியில் கொஞ்சம் இடம் இருந்தால், உங்களுக்குப் பிடித்தமான மற்றும் எளிதில் பராமரிக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்கலாம்.

இதை வளர்க்கும் போது, அதிலிருந்து கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் உற்சாகம் அளவிட முடியாதது.

வீட்டிலேயே வெஜிடபிள் ஸ்டாக் தயார் செய்யவும்: தண்டுகள் மற்றும் காய்கறித் தோல்களை தூக்கி எறிவதற்குப் பதிலாக, வீட்டிலேயே உங்கள் சொந்த கலவையை நீங்களே செய்யலாம். கேரட் டாப்ஸ், வெங்காயத் தோல்கள், உருளைக்கிழங்கு தோல்கள், பீட்ரூட் டாப்ஸ் மற்றும் சில காய்கறி தோல்கள் மற்றும் மூலிகைத் தண்டுகளை வேகவைத்து காய்கறி ஸ்டாக் தயாரிக்கவும்.

மேலும் படிக்க:

கோழிக்கறி சமைக்கப்போறீங்களா? இதப்படிங்க முதலில்!

பூ விழுந்தத் தேங்காயை சாப்பிடுவது ஆபத்தானதா?

English Summary: Here are 8 easy ways to save money and prevent food wastage!
Published on: 05 May 2022, 12:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now