மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 June, 2020 1:35 PM IST
Image credit by: WebMd

இனிப்பு என்றதும் நினைவிற்கு வருவது தேன்(Honey) தான். இதன் சுவையை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை, மலர்களின் மகரந்தங்களை கொண்டு தேனீக்களால் சேகரிக்கப்பட்டு, மனிதர்களால் தேனீக்களிடம் இருந்து எடுக்கப்படும் அருமருந்தே தேன். இது சுவைக்க மட்டும் இல்லை நம் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணிலடாங்கா நன்மைகளை செய்து வருகிறது.

தேனில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

தேனில் நிறைந்துள்ளவை ( Honey Contains)

தேனில் வைட்டமின்கள் பி1(B1), பி2 ( B2), சி (C), பி6 (B6), பி5 (B5) மற்றும் பி3 (B3)ஆகிவை அடங்கியுள்ளன. அவை மட்டுமின்றி தாமிரம், அயோடின், மற்றும் துத்தநாகம் ஆகியவையும் சிறிய அளவில் உள்ளன.

மேலும் தேனில் குளுக்கோஸ் மற்றும் ஃபரக்டோஸ் நிறைந்துள்ளன மற்றும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்றவைகளும் நிறைந்துள்ளன. இதனால் ஆரோக்கியம் முதல் ஆழகு வரை அனைத்திற்கும் தேன் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய தேனின் நன்மைகள் குறித்து வாருங்கள் பார்ப்போம்.

உடல் எடையை குறைக்க (Reduce weight)

தினமும் காலையில் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கவேண்டும். இவை மூன்றுமே வயிற்றை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இதனால் உணவு பொருள்கள் எளிதில் செரிமானமாவதை ஊக்குவிக்கும். அதோடு உணவிலிருக்கும் சத்துகளைப் பிரித்து உணவுபொருளை கரைப்பதற்கு உதவுகிறது. உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. இதனால் தேன் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. இது குடித்த அரைமணிநேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

நல்ல தூக்கம் தரும் தேன் (Honey for Good Sleep)

தினமும் இரவு தூங்கும் முன் 1 டீஸ்பூன் தேன் சாப்பிடுவது மிகவும் நல்லது, தேன் உடலின் தசைகளை ரிலாக்ஸ் செய்து அமினோ அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் தினமும் நல்ல தூக்கம் வரும்.

உயர் இரத்த அழுத்தம் (Blood pressure)

தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Anti-oxidants) உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை தவறாமல் சாப்பிடுவது நல்லது

Image credit by:Fast news feed

சளி, இருமல் பிரச்சனைக்கு (Honey for Cold and cough)

வெதுவெதுப்பான நீரில் தேனை கரைத்துக் குடித்து வந்தால் தொண்டை வலி, தொண்டை எரிச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து விடுப்படலாம். மேலும் ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபடவும் தேன் உதவுகிறது. இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இரவில் தேனை அளிப்பதால் அவை குழந்தைகள் இரவில் நிம்மதியாக உறங்க உதவும் என்பதை அய்வுகள் நிரூபித்துள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு தேனை அளிக்கும் முன் மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது

நீரிழிவு நோய் (Diabetics)

தேனில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 45 முதல் 64 வரை மாறுபடுகிறது. இது சராசரியான அளவு தான். தேனை உட்கொள்வதால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து இரத்த சர்க்கரையின் அளவு குறையும் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது (Increases the immune system)

தேனில் உள்ள அதிகபடியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், (Anti- Oxidants) ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் பல்வேறு நோய்களின் தாக்குதல் தடுக்கப்படும். மேலும் இதயம் சம்பந்தப்பட் நோய்கள் மற்றும் புற்றுநோயிலிருந்தும் நம்மை காக்க தேன் உதவுகிறது. தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Related link : தித்திக்கும் தேன் உற்பத்தி & விற்பனையில் கலக்கும் ஈரோடு தம்பதி!

உடல் பருமனை குறைக்கிறது (Reduces obesity)

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டுவது நல்லது. ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிலும் வெதுவெதுப்பான நீரால் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க மிகவும் உதவுகிறது.

Related link 
வெள்ளை சர்க்கரைக்கு தவிர்ப்பது எப்படி? ஒரு சில டிப்ஸ்!!

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

சோர்வை போக்குகிறது (Honey for energy)

தேனில், என்சைம்கள், புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை குறைந்த அளவே காணப்படுகிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவை சரிவர பங்களிக்க தேன் உதவுகிறது. செயற்கையான இனிப்பூட்டிகளை காட்டிலும், இயற்கையான தேன் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் அதிக ஆற்றலை அளிக்ககூடியது. தினமும் தேன் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் சோர்வு குறைந்து சுறு சுறுப்புடன் இருக்க செய்கிறது

Image credit by: Dabur

சரும அழகுக்கு தேன் (Honey for skin)

  • தேன் சருமத்தின் மேல் அடுக்கில் நுழைந்து, துகள்களில் ஊடுருவி அசுத்தங்களை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் நோய்த்தொற்று மற்றும் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

  • தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் (Moisturizer). ஏனெனில் இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பதமானது தக்க வைக்கப்படுவதோடு, சருமத்தை மிருதுவாக்கி அதன் நெகிழ்வு தன்மையை தக்க வைக்கிறது.

  • தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிலும் சரும அழற்சி, மற்றும் சரும பிரச்சனைகளை சரிப்படுத்த உதவுகிறது.

  • சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிக நேரம் பட்டால், அது சருமத்தை சேதப்படுத்தி முதுமை தோற்றத்தை ஏற்படச் செய்யும். ஆகவே தேனை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், அது சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும்.

  • சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளில் தேனை தொடர்ந்து தடவி வந்தால், உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.

தேன் - பக்கவிளைவுகள் (Honey side-Effects)

தேன் எண்ணற்ற பலன்களை வழங்கினாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல், தேனாலும் சில பக்கவிளைவுகள் ஏறபட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

பதப்படுத்தப்படாத தேனை சாப்பிடும்போது அது புட் பாய்சனை (Food Poision) ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒரு வயது பூர்த்தி அடையாத குழந்தைகளுக்கு தேன் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. பதப்படுத்தாத தேனில் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்னும் பொருள் குழந்தைகளுக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

மேலும் படிக்க...

தித்திக்கும் தேன் உற்பத்தி & விற்பனையில் கலக்கும் ஈரோடு தம்பதி!

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!



English Summary: Here are the health and beauty benefits of Honey
Published on: 30 June 2020, 09:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now