Health & Lifestyle

Tuesday, 17 May 2022 09:19 PM , by: R. Balakrishnan

Blood Pressure

கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, இந்தியாவில் மூன்று பேருக்கு ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. உப்பை குறைப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து தப்பலாம்.

அதுமட்டுமின்றி பானங்கள் குடித்தும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அந்தவகையில் எந்தெந்த பானங்களை குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதோடு பல்வேறு நோய்களில் இருந்தும் விலக்கு ஏற்படும்.

மாதுளை சாறு

பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் மாதுளை பழம் மிகவும் முக்கியமாகும். அதனால் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மாதுளை சாறு பருகலாம்.

கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றை விட மாதுளை சாற்றில் மூன்று மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால்; அதனை தினமும் குடித்தால் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.

சியா விதை நீர்

சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

சியா விதைகளை தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பின்பு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த நீரை வடிகட்டி, பருக வேண்டும். ஒரு மாத காலம் தொடர்ந்து குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தில் மாற்ற ஏற்படும்.

மேலும் படிக்க

குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: TNPSC அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)