அவன் இன்றி அணுவும் அசையாது என்பார்களே, அதைப்போல, மூளை உத்தரவுப் பிறப்பிக்காமல், உடல் உறுப்புகள் எதுவும் எந்த வேலையையும் செய்யாது. ஆக நம் உடலுக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழும் மூளையின் வளர்ச்சியைப் பாதுகாத்துக்கொள்ள நம் சமையலறைப் பொருட்களேப் போதும். ஏனெனில், இவை, நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உணவு முக்கிய பங்கு வகிக்கின்றன.
காலை முதல் இரவு வரை, கடைசியாக தூங்குவதற்கு போகும்போதும், குறிப்பாகச் செல்போன்களை ஒதுக்கி வைக்கும் தருணம் வரை, நமது மூளை தொடர்ந்து தகவல் மற்றும் பணிகளால் அழுத்தமடைகிறது. திரையின் நேரத்தைக் குறைத்தல், தியானம், ஓய்வெடுத்தல் மற்றும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் நம் வாழ்க்கைமுறையில் இணைத்துக்கொள்ளும் அதே வேளையில், நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர வேண்டியது கட்டாயம்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய பல பொருட்கள் உள்ளன. எனவே அவற்றைத் தெரிந்துவைத்துக்கொண்டு, உணவில் சேர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.
சாக்லேட்
சாக்லேட் உட்கொள்வது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில், இவற்றில் கோகோ பீன்ஸில் ஃபிளாவோனால் எனப்படும் சில சிறிய மூலக்கூறுகள் உள்ளன. இந்த மூலக்கூறுகள் மூளையின் சுறுசுறுப்பை மேம்படுத்துவதாக ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஃபிளாவனாய்டு உள்ளடக்கம் இருப்பதால் வழக்கமான அல்லது வெள்ளை சாக்லேட்டை விட டார்க் சாக்லேட்டை அதிகமாக உட்கொள்ள முன்வரவேண்டும்.
இலைக் காய்கறிகள்
பழங்காலத்திலிருந்தே பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாக இருப்பதுடன், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ்,கீரை போன்ற காய்கறிகளும் அறிவாற்றல் பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின் கே, பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் லுடீன் ஆகியவை நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
ஆரஞ்சு
ஃபிளாவனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தின் சாற்றை உட்கொள்வது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்த தகவல் கண்டறியப்பட்டது.
தேநீர்
நாம் அனைவரும் விரும்பும் அந்த காலைக் கப் டீ நமக்குத் தெரிந்ததை விட பல நன்மைகளைக் கொண்டிருக்கலாம். இஞ்சி மற்றும் கருப்பு மிளகு போன்ற தேநீரில் சேர்க்கப்படும் பல்வேறு பொருட்கள் அவற்றின் சொந்த நன்மைகளைக் கொண்டிருந்தாலும், தேநீர் மூளையின் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வழக்கமான தேநீர் அருந்துபவர்கள், குடிக்காதவர்களை விட ஒரு நன்மையைப் பெறலாம், அதில் அவர்கள் சிறந்த மூளை அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.
மீன்
மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இதயப் பிரச்சனைகள் முதல் தோல் மற்றும் முடி ஆரோக்கியம் வரை, மீன்களின் ஆரோக்கியமான கொழுப்புகள் கிட்டத்தட்ட அனைத்து வகையான ஆரோக்கியமான உணவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், உங்கள் உணவில் மீன் சேர்த்துக்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்-ஈ ஆகியவற்றுடன், மீனில் உள்ள சில ஆக்ஸிஜனேற்றங்கள் டிமென்ஷியா அபாயத்தைத் தடுக்க உதவும்.
மேலும் படிக்க...
பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!
பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!