உடலில் கோடுகள் போல் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க் என்று கூறப்படும் பிரசவ தழும்புகள் தாய்மை அடைந்த பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, சில காரணங்களால் ஆண்களுக்கும் ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.
ஸ்ட்ரெச் மார்க் காரணங்கள்(Causes of Stretch Mark)
ஆண்களை விட அதிகமான பெண்களுக்கு தான் ஸ்டரெச் மார்க் ((Stretch Marks) பெருமளவில் ஏற்படுகிறது.
- கர்ப்பம் காலத்தில் விரைவான எடை அதிகரிப்பு குறைதல், குறிப்பாக, வயிற்று பகுதி விரிவடைந்து, பிரசவத்திற்கு பின் திடீரென் சுருங்குவதன் காரணத்தால், தோல்களில் வடுக்கள் ஏற்படுகிறது. இது பிரசவ தழும்புகள் என்றும் அழைக்கப்படுகிறது.
- மார்பகங்களை பெரிது படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தழும்புங்கள் ஏற்படுகிறது
- சிசேரியன் அறுவை சிகிச்சை, முதலியனவும் இதற்கு காரணமாகும்.
மேலே குறிப்பிட்ட காரணங்கள் அல்லது இன்னும் பிற காரணங்கள் காரணமாக இடுப்பு, வயிறு, மார்பகம் மற்றும் அக்குள் அருகே உடலின் ஸ்ட்ரெச் மார்க்குகள் அல்லது கோடுகள் வடிவிலான தழும்புகள் உண்டாகின்றன. ஸ்ட்ரெட்ச் மார்க்கை அகற்ற சில வீட்டு வைத்தியங்களை இங்கே பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்(coconut oil)
தேங்காய் எண்ணெய் ஸ்ட்ரெட்ச் மார்க்கை அகற்ற மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த தழும்புகளின் தோற்றத்தை மிக விரைவாக குறைக்கும் திறமை கொண்டுள்ளது. உங்களுக்கு தேங்காய் எண்ணையில் ஒவ்வாமை இல்லை என்றால், நீங்கள் தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஸ்ட்ரெட்ச் மார்க்கில் தடவலாம். இது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.
சர்க்கரை(Sugar)
அக்குள் பகுதியில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்குகளை அகற்ற சர்க்கரையைப் பயன்படுத்தவும். இது மிகவும் உதவியாக இருக்கும். இதற்காக, 1/4 தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் 1 கப் சர்க்கரையை கரைக்க வேண்டும். இதன் பிறகு, இந்த கலவையில் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்த்து இந்த கலவையை தழுப்பு உள்ள பகுதியில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் மெதுவாக தடவி பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை(Aloe-Vera)
பெரும்பாலான மக்கள் ஸ்ட்ரெச் மார்க்குகளை அகற்ற, கற்றாழை பயன்படுத்த முயற்சி செய்யலாம். ப்ரெஷ்ஷான கற்றாழை இலையை எடுத்து, அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை சேகரித்து, இந்த ஜெல்லை ஸ்ட்ரெடச் மார்க்கில் தடவி 20 முதல் 40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். அதன் பிறகு கழுவவும். நீங்கள் கற்றாழை கலந்த தேங்காய் எண்ணெயையும் தடவி கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு(Potatoes)
உருளைக்கிழங்கு தோலின் மீதுள்ள தழும்புகளை அகற்றவும் பயனளிக்க கூடியது. ஏனெனில், இது தோலை வெளுக்க செய்யும் பிளீச் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி அதை பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இப்போது இந்த சாற்றை அரைத்த உருளைக்கிழங்குடன் மீண்டும் கலந்து, 30 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சருமத்தை சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
மேலும் படிக்க: