ஒமிக்ரான், கொரோனா போன்ற வைரஸ் தொற்றுகள் அதிகமுள்ள காலங்களில் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில் அது மட்டுமே பெருந்தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
எனவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகள் எவை என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது மட்டுமல்ல, அவற்றை தினமும் சாப்பிடத் தொடங்குவதும் ஆரோக்கியத்தின் அடையாளமே.
அந்த வகையில் நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி தருவதுடன், ஒமிக்ரான் போன்றத் தொற்று நோயை எதிர்த்துப் போராட உதவும் இந்த 6 உணவுகள் உதவும். அவை எவை என்பதைப் பார்ப்போம்.
இஞ்சி (Ginger)
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளன.இது தொண்டை வலியை குணப்படுத்த உதவுகிறது. கிருமிகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவற்றை தினமும் தேநீரில் சேர்ப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும்.
தினை (Millet)
நார்ச்சத்து அதிகம் உள்ள தினைகளில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக அமைகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இந்த குளிர்காலத்தில், ராகி போன்ற தினைகளைச் சேர்ப்பது மிகவும் நல்லது. அவை அதிக நார்ச்சத்து கொண்டவை, உங்கள் செரிமான அமைப்புக்கு நல்லது மற்றும் உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
நெய் (Ghee)
எளிதில் ஜீரணிக்கக்கூடிய கொழுப்பு உணவுகளில் ஒன்றாகும். இது உடலில் வெப்பத்தை உருவாக்கி உங்களை சூடாக வைத்திருக்க உதவுகிறது. இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பது மிகச் சிறந்ததாகும்.
ஆம்லா அல்லது நெல்லிக்காய் (Amla or gooseberry)
இது வைட்டமின் சி நிறைந்த பருவகால உணவு மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும் முக்கிய ஆதாரமாகும். எனவே இந்த தொற்று பரவும் சூழலில் நெல்லிக்காய் சாற்றை தொடர்ந்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக்கொள்வோம்.
மஞ்சள் (Turmeric)
இவை ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி. எனவே இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அனைத்து இருமல் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். 1 டீஸ்பூன் மஞ்சளை எடுத்து, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருதல் நமது உடலுக்கு கூடுதல் நன்மை பயக்கும்.
தேன் (Honey)
இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் என்பதுடன். செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும், இது தொண்டை வலிக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒமிக்ரானுடன் போராட உங்கள் இஞ்சி மற்றும் தேன் கலந்த தேநீர் பருகுவது மிகவும் நன்மை பயக்கும்.
உங்கள் தினசரி உணவில் சர்க்கரையை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள், ஏனெனில் இது உங்கள் எடையை அதிகரிக்கும் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது குறைக்கும்.
தகவல்
ருச்சி பர்மர்
உணவியல் நிபுணர்
மேலும் படிக்க...
Be Alert: இந்த ஆரோக்கிய உணவுகளும் ஆபத்தாய் முடிய வாய்ப்பிருக்கு!
10, 12 வகுப்புகளுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வு- அமைச்சர் அறிவிப்பு!