Health & Lifestyle

Tuesday, 01 March 2022 07:21 AM , by: R. Balakrishnan

Benefits of Horse Gram

கொள்ளு அற்புதமான உணவு. குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளுதான். வேகத்திற்கும், வீரிய சக்திக்கும் கொள்ளு மிகச்சிறந்த உணவாகும். குதிரை கொஞ்சம் கூடக் களைப்படையாமல் எத்தனையோ கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் இந்தக் கொள்ளுதான்!

அடங்கியுள்ள சத்துக்கள் (Nutrients)

கொள்ளில் வைட்டமின் ஏ, பி1, பி2, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை போதுமான அளவு உள்ளன. இதில் நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகமாக இருப்பதால்,
கொஞ்சம் சாப்பிட்டாலே போதும். கொள்ளுப் பருப்பைக் கடைந்து, சாப்பாட்டில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். அதனுடைய ருசியே அலாதியாக இருக்கும். கொள்ளு ரசம்
உங்களுக்குச் சக்தியை ஊட்டும். அடைக்கு மாவிற்கு ஊறப்போடும்போது, பருப்புடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி கொள்ளு சேர்த்து ஊறப் போடவும். அடை மிருதுவாக இருக்கும்.

பயன்கள் (Benefits)

உங்களுக்குக் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளதா? கவலைப்பட வேண்டாம். கொள்ளுச் சட்டினியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள இட்லிப்பொடி, மிளகாய்ப்பொடி வறுக்கும்போது ஒரு தேக்கரண்டி அளவுக்குக் கொள்ளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையாக இருக்கும். கொள்ளை வேக வைத்துச் சுண்டல் போலவும் சாப்பிடலாம்.

  • கொள்ளை வேக வைத்து அதிலிருந்து வடிகட்டிய சாற்றைக் குடித்து வந்தால் இரத்த விருத்தி உண்டாகும். வயிற்றுவலி மறையும்.
  • சர்க்கரை வியாதிக்காரர்கள் கொள்ளுச் சட்டினி, கொள்ளுப் பருப்பு ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • எடை அதிகரிக்காமலிருக்க, கொலஸ்ட்ரால் பிரச்னைக்கு முடிவு கட்ட, தினந்தோறும் கொள்ளை உணவில் சேர்த்து வந்தால், வியக்கத்தக்க மாற்றத்தை காண்பீர்கள்.
  • பெண்களுக்கு உண்டாகும் மார்பகப்புற்று நோய்க்குக் கொள்ளு சிறந்த மருந்தாகும்.
  • பல வகையிலும் மருந்தாகப் பயன்படும் கொள்ளை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொண்டு பலனைப் பெறுங்கள்.

மேலும் படிக்க

பொடுகுத் தொல்லை நீங்க பீட்ரூட்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

விரைவான முதுமையைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)