இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 May, 2022 11:44 AM IST

இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.

நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடே ரத்த சோகை எனப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் நிறமிகள் உள்ளன. நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனைத் திசுக்களுக்கு எடுத்துச்செல்வதே இவற்றின் பணியாகும்.

அவ்வாறு, நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, இதன்மூலம் ஹீமோகுளோபினின் செயல்பாடுகளும் குறைந்து, ஆக்ஸிஜன் எடுத்துச்செல்லப்படுவது தடை படும் நிலை ஏற்பட்டால், ரத்த சோகை ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த ரத்தசோகையால் பெரியவர்கள் பாதிக்கப்படும் போது அதனை எளிதில் கண்டுபிடித்துவிடுகிறோம். ஆனால், குழந்தைகளில் இதனைக் கண்டுபிடிப்பது கடினமாகவே உள்ளது.

அறிகுறிகள்

  • இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காயங்கள், பழுதடைந்த திசுக்கள் குணமாக தாமதமாகும்.

  • உடல்நலக் குறைவு அடிக்கடி உண்டாகும். சிவப்பு இரத்த அணுக்களால் ஆன்டிபாடிகளை எடுத்துச் செல்ல முடியாததால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்படும்.

  • காயங்கள் குணமடைய தாமதமாகி, நாட்கணக்கில் காயங்களுடன் இருக்க வைக்கிறது.

  • இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர்.

  • அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம்.

மருத்துவப் பரிசோதனை

இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை மேற்கூறிய அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் இதில் ஏதாவது ஒன்று காணப்பட்டால் கூட கண்டிப்பாக அக்குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் கூட்டிச்சென்று, இரத்தசோகை இருப்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்து கண்டுப்பிடித்தல் அவசியம். இரத்தசோகை பல காரணங்களால் உண்டாவதால், அந்நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் அதற்கான பரிசோதனை முறையை பரிந்துரை செய்வார். 

முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, இரத்த ஸ்மியர் பரிசோதனை, இரும்புச்சத்து பரிசோதனை, ஹீமோக்ளோபின் எலக்ட்ரோப்ஹோரெசிஸ், எலும்பு மஜ்ஜை ஆஸ்பிரேஷன் மற்றும் திசு பரிசோதனை போன்றவைகளால் இந்த நோயை கண்டறிய முடியும்.
இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.

மேலும் படிக்க...

பணிநேரத்தில் ஊழியர்கள் தூங்கலாம்- அனுமதி அளித்த நிறுவனம்!

ஊறவைத்த முந்திரியின் எக்கச்சக்க நன்மைகள்!

English Summary: How is pediatric anemia diagnosed?
Published on: 09 May 2022, 11:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now