Health & Lifestyle

Monday, 06 June 2022 08:29 AM , by: Elavarse Sivakumar

மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும் பானங்கள் பல இருந்தாலும், இவற்றில் முக்கிய இடம் பிடிப்பது டீ எனப்படும் தேநீர். சில நாடுகளில் காபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், டீ (தேநீர்) தான் உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாக இருக்கிறது.

நன்மைகள் ஏராளம்

இந்த அற்புதப் பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உள்ளிட்டவை அடங்கும்.

டீ மனதை குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகபடியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நாள் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு கப்க்கு அதிகமாக டீ குடிப்பது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைகளுக்கு மேல் குடிப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தூக்கமின்மை

ஒருவர் அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. போதுமான தூக்கம் வரவில்லை என்றால், நீங்கள் அனைத்து வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அத்தகைய நிலையைத் தவிர்க்க, டீ குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஒரு நாளைக்கு 2 கப் டீ பருகினால் போதும் என்று பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

பதற்றம்

அதிகமாக டீ குடிப்பது கவலையை அதிகரிக்கும். தேநீரிலும் காஃபின் உள்ளது. அதிகப்படியான காபின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. அத்தகைய சூழலில், நீங்கள் இந்த பழக்கத்தை படிப்படியாக மாற்ற வேண்டும். மேலும் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, நிலையில்லாமல் மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருப்பது போன்ற பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது.

குடலுக்கும் நல்லதல்ல

அதிகமாக தேநீர் குடிப்பது குடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது உங்கள் குடலை சேதப்படுத்தும். இது உணவை ஜீரணிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நெஞ்சு எரிச்சல் பிரச்சனை மேலும் அதிகரிக்கிறது.

ரத்த சோகை

டீ அதிக அளவில் குடித்தால் ரத்த சோகை ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதிலுள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், இவ்வாறு கூறுகின்றனர். மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் படிக்க...

பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!

10 நிமிடத்தில் மது டெலிவரி- குடிமகன்களுக்கு குஷி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)