உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் கால்சியம் சத்து எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என்று பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே முக்கிய காரணமாகும். குறிப்பாக பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடுத்தர வயது ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் எடுத்துக்கொள்வது அவசியம். பெண்களுக்கு 1,300 மில்லி கிராம், 4 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1,300 மில்லி கிராம் கால்சியம் அவசியமாகும்.
கால்சியம் குறைப்பாட்டை ஹைபோகால்சீமியா என்று கூறப்படுகிறது. கால்சியம் குறைபாடு உடையவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, மன அழுத்தம், பலவீனமான நகங்கள், மற்றும் தேய்மானம் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்வார்கள். பொதுவாக, கால்சியம் சத்து என்றாலே பால் பொருட்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் என்று கருதுபவர்கள் உண்டு. பால் பொருட்கள் அல்லாத காய்கறி, பழங்களிலும் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது என்று தெரியுமா?
குறிப்பாக, பாதாம், பீன்ஸ் மற்றும் பருப்பு, அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளில் கால்சியம் அதிகளவில் நிறைந்துள்ளது.
உலர்ந்த முருங்கை தூளில் 300 மில்லி கிராம் கால்சியம் காணப்படுகிறது . இதேபோல், ப்ரோக்கோலி, சக்கரை கிழங்கு, சூரியகாந்தி விதைகள், வெண்டைக்காய், ஆரஞ்சு பழங்களிலும் அதிகளவிலான கால்சியம் சத்துகள் அதிகளவில் நிறைந்துள்ளன.
கால்சியம் குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படி?How to detect calcium deficiency?
கால்சியம் குறைப்பாட்டை ஆரம்பக் காலங்களிலேயே கண்டுபிடிக்க சாத்தியம். உடலில் தோன்றும் சில அறிகுறிகள் கால்சியம் குறைப்பாட்டை உணர்த்தும். கால் வலி, தசைப்பிடிப்பு ஆகியவை தொடர்ந்து ஏற்பட்டால் கால்சியம் குறைபாடு இருக்கலாம் என்பதை உணர வேண்டும். இந்த வலிகளுக்கும் கால்சியம் குறைப்பாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்பது கூட பலருக்கும் தெரியாது.
இதேபோல், அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருக்கும் நபர்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஆரம்ப நிலையிலேயே கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து பாதுக்காப்பாக இருக்க முடியும்.
மேலும் படிக்க: