ரோஜா பூ, பார்பவரின் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்திடும் பூவாகும். இதன் வாசனை அனைவரையும் ஈர்த்திடும். அந்த வகையில், பார்க்க மட்டுமில்லாமல் இதற்குள் இருக்கும் மருத்துவ குணங்களும் ஏறலாம்.
ரோஜாவின் மருத்துவ குணம் (Rose Flower Medicinal Properties)
ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.
ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.
பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.
இவ்வாறு பல மருத்துவ குணம் கொண்டிருக்கிறது, ரோஜா பூ.
அடுத்து இதனை எவ்வாறு உபயோகிக்கலாம் (Next how to use it)
சிலர் இதை அப்படியே சாப்பிடுகிறார்கள், அதுவும் நன்மைதான். ஆனால் இதை வெறு எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம். பார்ப்போம் வாருங்கள்.
ரோஜா பூ இதழ்களை, தனித்தனியாக எடுத்து, அதை தண்ணீரில் போட்டு வைத்து, 2-3 நாட்களுக்கு பிறகு, அந்த தண்ணீரை முகத்தில் தடவினால், சருமத்திற்கு குளிர்ச்சி தரும். அதே நேரம் இரவில் வேலை செய்பவர், லெப்டப், போபைல் பார்பவர்கள் இதை கண்களை சுற்றி தடவினால் நல்ல நிவாரணியாக, இது பயன்படும்.
மற்றொரு வலி, ரோஜா பூ இதழ்களை தனிதனியாக எடுத்து, தண்ணீரால் சுத்தம் செய்த பின், இதை நன்றாக உளர வைத்தல் வேண்டும். பின்னர் இதை கல்கண்டு, தேன் சேர்த்து ஒரு வானலில் போட்டு கலந்திட வேண்டும். அதன் பின்னர் அதை 2-3 நாட்கள் வெயிலில் வைத்து உட்கொண்டால். மலச்சிக்கலும் நீங்கும், அதே நேரம் மலச்சீக்கலினால் உடலில் ஏற்பாடும் மற்ற பிரச்சனைகளையும் உடனே தீர்க்கும்.
ரோஜா பூவியை பொடியாக்கியும் பயன்படுத்திடலாம், அதற்கு ரோஜா பூ இதழ்களை தண்ணீரால் சுத்தம் செய்து, நன்றாக ஊளர வைக்க வேண்டும். பின்னர், அதை வெயிலில் 4-5 நாட்கள் காய வைக்க வேண்டும். காய்ந்த இதழ்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தல் வேண்டும். இவ்வாறு செய்த பின் கிடைக்கும் பொடியை, ஸ்டோர் செய்து வைத்து உபயோகித்திடலாம்.
மேலும் படிக்க:
குறுவை பயிர்களில் கடுகு விதைப்பு 22% உயர்வு என வேளாண் அமைச்சு அறிவிப்பு