மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 April, 2022 7:38 PM IST
How to use potatoes for skin care?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு உருளைக்கிழங்கு. இதை உணவாக மட்டுமில்லாமல் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். 5000 வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் உருளையை சருமப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வந்துள்ளனர். தொல்லியல் சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது, பெருவில் உருளையின் தோல்களை, சரும எரிச்சலை ஆற்றும் மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

உருளைக்கிழங்கு (Potato)

  • உலகில் சில பகுதிகளில் இதனை சோப்பாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். காலம் மாறமாற உருளை நம்முடைய சமையலில் முக்கிய பொருளாக பயன்பட ஆரம்பித்தது.
  • உருளையில் உள்ள பாலிபினால்ஸ் சூரிய கதிர்களால் ஏற்படும் கருமையை நீக்கி, களைப்படைந்த சருமத்தை சீராக்கும்.
  • உருளை சாற்றில் துத்தநாகம் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள வடு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
  • இதில் உள்ள இரும்புச் சத்து உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவும்.
  • அசிலைக் ஆசிட் தன்மை கொண்டதால், இயற்கையாகவே சருமம் பளிச்சிட உதவும். அசிலைக் மற்றும் சைடோகைன் இரண்டும் முகப்பருவினால் ஏற்படும் பாதிப்பையும் நீக்கும்.
  • உருளையில் அதிக அளவு லைசின் என்ற புரதச் சத்து உள்ளதால், இது சருமத்தில் உள்ள தசைகள், முடி மற்றும் விரல் நகங்களை சீராக்க உதவும்.
  • விட்டமின் சி சருமத்தில் தோன்றும் சுருக்கத்தை நீக்கி இளமையாக இருக்க உதவும். உருளை சாற்றில் அதிக அளவு விட்டமின் சி உள்ளதால் என்றும் இளமையாக இருக்க உதவும்.
  • பொட்டாசியம் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.
  • இதில் உள்ள ஹயாலுரானிக் அமிலம் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கும்.
  • உருளை தோலில் ரைபோபிளேவின், அஸ்கார்பிக் அமிலம், போலிக் அமிலம் மற்றும் விட்டமின் பி இருப்பதால் கண், சருமம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு சிறந்தது.

உருளை அழகு குறிப்புகள் (Potato Beauty tips)

  • உருளை பவுடர் + 1 டீஸ்பூன் ஓட்ஸ் + 2 டீஸ்பூன் தயிர், இவற்றைக் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் வட்டவடிவத்தில் தேய்த்து கழுவலாம். வாரத்தில் இரண்டு முறை செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
  • உருளை பவுடர் + 2 டீஸ்பூன் குளிர்ந்த பால், இவற்றை கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறையும்.
  • உருளை பவுடர் + 3 டீஸ்பூன் பன்னீர், நீர்க்க கரைத்து அதில் டிஷ்யு பேப்பரை நனைத்து முகத்தினை மூடி 15 நிமிடம் கழித்து எடுத்தால், சருமம் பளிச்சென்று இருக்கும்.

மேலும் படிக்க

நாம் ஏன் சப்போட்டா பழத்தை சாப்பிட வேண்டும்?

களைச்செடியில் அழகிய பர்னிச்சர்கள்: இளைஞர்கள் அசத்தல்!

English Summary: How to use potatoes for skin care?
Published on: 26 April 2022, 07:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now