பால் என்று நினைக்கும்போதே, அதன் தூய்மை நம் நினைவுக்கு வரும். நம் மனசையும் பாலைப்போன்று தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் எழ வேண்டும். ஆனால் பால் என வரும்போது, அதை எப்படிக்குடிக்க வேண்டும்? சூடாக அல்லது, குளிர்ச்சியாக குடிகக் வேண்டுமா? பாலை காலையில் குடிப்பது மிக நல்லதா? அல்லது, இரவில் குடிப்பது மிக நல்லதா? இப்படி பல்வேறு சந்தேகங்களும் எழுவது வாடிக்கைதான். இதற்குத்தீர்வு காணத் தொடர்ந்து படியுங்கள்.
உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளின் வரிசையில் பாலுக்கு முக்கிய இடம் உள்ளது. பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. பாலில் உள்ள ஊட்டச்சத்து மிக அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் பாலில் பல நுண்ணூட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பலர் பாலை சூடாக குடிக்க விரும்புகிறார்கள், சிலரோ அதை குளிர்ச்சியாக குடிக்க விரும்புகிறார்கள். சிலர் சர்க்கரையுடன், சிலர் சர்க்கரை இல்லாமல் பாலை உட்கொள்கிறார்கள்.
எப்படிக் குடிக்கலாம்?
பாலை குளிர்ச்சியாகவா அல்லது சூடாகக் குடிக்க வேண்டுமா? என்றால், இரண்டுமே நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், நீங்கள் அந்த முறையை பருவத்திற்கு ஏற்ப மாற்றலாம்.
கோடையில் பாலை குளிர்ச்சியாகக் குடிக்கலாம். ஆனால், பகலில் மட்டுமே அப்படி செய்ய வேண்டும். வெயில் காலத்தில் பாலை குளிர்ச்சியாக உட்கொண்டால், வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதே நேரத்தில், குளிர்காலத்தில் இரவில் சூடான பாலை குடித்தால், அது நன்மை பயக்கும்.
நேரம்
ஆயுர்வேதத்தின் படி, தூங்குவதற்கு முன் பால் குடிப்பதே சரியான முறையாகும். இரவில் அதிக சுறுசுறுப்பு இல்லாவிட்டால், உங்கள் உடல் அதிக கால்சியத்தை உறிஞ்சிவிடும். அதே நேரத்தில், குழந்தைகள் காலையில் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒன்று முதல் இரண்டு கப் பால் நாள் முழுவதும் போதுமானதாக கருதப்படுகிறது.
நன்மைகள்
-
பாலில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.
-
பாலில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
-
பாலில் உள்ள வைட்டமின் டி இயற்கைக்கு மாறான செல் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.
-
பால் குடிப்பதால், மகிழ்ச்சியுடன் தொடர்புடைய செரோடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு தூண்டப்படுகிறது. இது பதற்றத்தை குறைக்கிறது.
-
பால் குடிப்பதால், உடலுக்கு இயற்கையான கொழுப்பு கிடைக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
-
உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்காது.
மேலும் படிக்க...