பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 June, 2022 10:29 AM IST

நமது ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதையே பிரிட்ஜில் வைத்துக்குடிப்பது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.

ஆனால், கோடைகாலத்தில் குளிர்நீர் குடிக்க விரும்புவோம். எனவெ குளிர்சாதன பெட்டியில் வைத்து குளுமையான நீரை குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

ஐஸ் வாட்டர்

வெயிலுக்கு தொண்டைக்கு இதமாக இருப்பது போல தோன்றினாலும், குளிர் நீரால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. ஃபிரிட்ஜ் தண்ணீர் குடிப்பதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதேநேரத்தில் குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலத்தில் சூடாக இருந்தாலும், உடலுக்கு தீமை செய்யாது.

பானைத் தண்ணீர்

பானையில் வைக்கப்படும் தண்ணீர் மிகவும் குளிராகவோ, சூடாகவோ இருக்காது. இந்த நீர் தொண்டைக்கு மிகவும் நல்லது. சளி, இருமல் இருந்தாலும் பானை தண்ணீர் குடிப்பதால் எந்த பிரச்சனையும் வராது. மனித உடல் அமிலம் மற்றும் காரத் தன்மை கொண்டது. பானை நீர் நமது உடலின் அமிலத் தன்மையுடன் வினைபுரிந்து சரியான pH சமநிலையை உருவாக்க உதவுகிறது. இதனால் தான் பானை தண்ணீர் குடிப்பதால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று பிரச்சனைகள் ஏற்படாது.

நீரிழப்பு அல்லது வெப்பத் தாக்கம் ஏற்படுவது கோடை காலத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகும். இதற்கு ஒரே தீர்வு மண் பானையில் வைக்கப்படும் தண்ணீர் மட்டுமே. மண்பானைத் தண்ணீரில் சத்துக்கள் உள்ளன. அவை உடலில் குளுக்கோஸின் அளவை பராமரிக்க உதவுகின்றன.நீரிழப்பு மற்றும் கோடையில் ஏற்படும் உடல் சூடு போன்ற பிரச்சனைகளையும் மண்பானைத் தண்ணீர் தடுக்கிறது.

செரிமான பாதிப்பு

குளிர்சாதனப் பெட்டி நீர் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. இதை குடிப்பதால் இரத்த நாளங்கள் சுருங்கும், இது செரிமான செயல்முறையைத் தடுக்கிறது. எனவே, குளிர்நீரை பருகுவதால், உணவுடன் தொடர்புடைய ஊட்டச்சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை. நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். குளிர்ச்சியான ஒன்றைக் குடிக்கும்போது, ​​​​அந்தப் பொருளின் வெப்பநிலையுடன் சமநிலைப்படுத்த உடல் அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து

அதேசமயம், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், செரிமானம் செய்வதற்கும் இந்த ஆற்றல் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஃபிரிட்ஜில் வைக்கும் குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.

மேலும் படிக்க...

பப்பாளி சுகர் நோயாளிகளுக்கு சூட் ஆகுமா?

பெண்கள் இதை அதிகம் குடித்தால் ஆபத்து?

English Summary: Ice water vs mud water, which side effects?
Published on: 02 June 2022, 10:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now