Health & Lifestyle

Thursday, 24 March 2022 08:38 PM , by: Elavarse Sivakumar

குளிர்காலத்தில் ஏறிய உடம்பைக் குறைக்கக் கோடை காலம் உதவும் என்பார்கள். ஏனெனில், குளிர்காலத்தில், நம்மை அதிகளவில் தூக்கம் ஆட்கொள்ளும். இதனால் வெளியே செல்லமுடியாமல், சாப்பிட்டு, சாப்பிட்டுத் தூங்குவதால், உடல் எடைக் கூடும். அது மட்டுமல்லாமல் மதுபானங்கள் கூல்ட்ரிங்ஸ், குடிக்கும் பழக்கம் அதிகரிக்கும். இந்த பழக்கத்தின் காரணமாக நம்மை அறியாமலே நமது உடல் எடை அதிகரிக்கும்.

அதேநேரத்தில் கோடை காலத்தில் அதிக வெப்பம் நம்மை வாட்டி வதைக்கும். எனவே இந்த நாட்களில், உடல் எடையை குறைக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும், இரண்டு பானங்கள், பெரிய உதவியாக இருக்கும்.

தேங்காய் தண்ணீர்

இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் பிரபலமான இளநீர், (தேங்காய் நீர்) பெரும்பாலான மக்கள் மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக உள்ளது. இதில் நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு இல்லாதது மற்றும் மிகவும் சத்தானது கூடுதலாக, இது ஒரு சிறந்த நீரேற்றம் மற்றும் எடை குறைப்புக்கு உதவும்.

மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவை ஜீரணிக்கச் செய்ய இந்த பானம் மிகவும் எளிதானது. வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தவும், உடலின் கொழுப்பை எரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரிகள் மற்றும் நன்மை பயக்கும் செரிமான நொதிகள் நிறைந்தத் தேங்காய் நீர் எடை குறைப்பு மற்றும் நீரேற்றத்திற்கான கோடைகால பானமாக உள்ளது.

எலுமிச்சை நீர் 

வைட்டமின்-சி, சிட்ரிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள், அதிகம் நிறைந்துள்ள எலுமிச்சைப் பழம் அல்லது எலுமிச்சை நீர் ஆகியவை வெப்பத்தைத் தணிக்க உதவும் மற்றொரு புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது செரிமானத்தை எளிதாக்குகிறது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. வழக்கமான எலுமிச்சைப் பழத்தை சாப்பிடுவதற்குப் பதிலாக, வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறை சேர்த்து, சாப்பிடும்போது தொப்பை கொழுப்பை நீக்குவதற்கு உதவும்.

இதில் நீங்கள் சுவைக்காக உப்பு அல்லது ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கலாம்; உங்களுக்கு எது பொருத்தமானதோ அதன்படி எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சை நீர் உடலில் இருந்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க ஒரு சிறந்த பானமாகும். குறிப்பாக தேன் சேர்த்துக் கொண்டால், உடல் செயல்பட போதுமான ஆற்றலை வழங்கும்.

மேலும் படிக்க...

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

ஜில் ‘பீர்’ தட்டுப்பாடு- டாஸ்மாக்கில் அமோக விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)