கோடை வெயில் இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. இந்த வெயிலுக்கு இதமாக, வெள்ளரிக்காய் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பது நம் அனைவரும் தெரியும். அதிலும், தெரியும், குறிப்பாக கோடையில் இதை சாப்பிடுவதால் பல நன்மைகளைப் பெறமுடியும்.
வெள்ளரிக்காய் உடலுக்கு தேவையான நீர் சத்தை வழங்குகிறது. சருமம் மற்றும் தலைமுடி எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். வெள்ளரிக்காய் கோடையின் சூப்பர் உணவுகளில் ஒன்றாகும். இது உடலை குளிர்விப்பதோடு, நீர் சத்து பற்றாக்குறை ஏற்பட ஒருபோதும் அனுமதிக்காது. வெள்ளரிக்காய் உடலுக்கு தேவையான நீர் சத்தை வழங்குவதோடு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை பயக்கும். அதனால்தான் மக்கள் கோடையில் வெள்ளரியை விரும்பி சாப்பிடுவார்கள்.
எனினும் நீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடும் போது செய்யும் சில விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதைத் தெரிந்துகொள்ளாவிட்டால், வெள்ளரிக்காயில் இருந்துக் கிடைக்கும் ஊட்டச்சத்தை முழுமையாகப் பெற முடியாது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
வெள்ளரிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. இதைத் தவிர, செரிமான செயல்முறையும் மிகவும் பாதிக்கப்படுகிறது.
தீமைகள்
உண்மையில், 95% வெள்ளரிக்காயில் தண்ணீர் மட்டுமே உள்ளது. இது தவிர, அனைத்து சத்துகளும் இருப்பதால், உடனடியாகத் தண்ணீர் குடித்தால், உடலுக்கு இந்த சத்துக்கள் கிடைக்காது.
வயிற்றுப் போக்கு
வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும். ஆனால் வெள்ளரிக்காய் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால்,வயிற்று போக்கு பிரச்சனை வரலாம். எனவே, வெள்ளரிக்காய் சாப்பிட்ட அரை மணி நேரம் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
பழங்கள் கூடாது
வெள்ளரிக்காய் மட்டுமல்ல, நீர்ச்சத்து நிறைந்த எந்தப் பழம் அல்லது காய்கறிகளிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, நீங்கள் தர்பூசணி, அன்னாசிப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால், தண்ணீரைத் தவிர்க்கவும்.
pH பலவீனமடையும்
எந்த உணவையும் ஜீரணிக்க, குடலில் pH அளவு தேவைப்படுகிறது, ஆனால் வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலமோ அல்லது தண்ணீரைக் குடிப்பதன் மூலமோ, இந்த pH அளவு பலவீனமடைகிறது, மேலும் செரிமானத்திற்கு தேவையான அமிலம் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
வெள்ளரிக்காய் மட்டுமல்ல, வேறு எந்தப் பச்சைக் காய்கறிகளின் முழுப் பலனையும் பெற வேண்டுமானால், அவற்றைப் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க...
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!