Health & Lifestyle

Monday, 14 February 2022 01:10 PM , by: Elavarse Sivakumar

உணவுப் பொருட்களில் சிலவற்றைப் பச்சையாகச் சாப்பிடும்போது அதிகப்படியான நற்பலன்களை அளிக்கின்றன. அந்தவகையில்,
உடல் எடை குறைப்புக்கும், அதிகபட்ச ஆரோக்கிய நலன்களுக்காகவும் பச்சையாக சாப்பிட வேண்டிய ஐந்து உணவுகள் இங்கே பட்டியலிடப்படுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் ஊட்டச் சத்துக்களின் ஆற்றல் மையமாக உள்ளன. ஆனால் இவற்றை பதப்படுத்தப்படாமல் அல்லது சமைக்கப்படாமல் எடுத்துக் கொள்வது சிறந்தது. இவற்றில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. அதேநேரம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும், உங்கள் செரிமானத்திற்கு அற்புதமாக செயல்படக்கூடிய இயற்கை என்சைம்களைக் கொண்டுள்ளன. ஆனால் இவற்றை சமைக்கும் போது இந்த இயற்கை என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அழிந்து போகின்றன.

இருப்பினும், இவற்றைப் பச்சையாக எடுத்துக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் இவை சில சந்தர்ப்பங்களில் உணவு விஷத்திற்கு வழிவகுக்கும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் அல்லது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கீரை

கீரைகள் நம் மனதை மேம்படுத்துவதுடன், எடை இழப்புக்கும் உதவுகிறது. கீரையில் கலோரிகள் குறைவாகவும், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. இது உங்களுக்கு நிறைவான உணவாக உள்ளதோடு, உங்கள் பெருங்குடலையும் சுத்தப்படுத்துகிறது. இதன் விளைவாக, உங்கள் செரிமானம் மேம்படுகிறது, நீங்கள் எளிதில் எடையைக் குறைக்க முடியும்.

பூண்டு

நாம் பெரும்பாலும் உணவின் சுவைக்காக பூண்டைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவை எடை இழப்புக்கு மிகவும் அற்புதமாக உதவுபவை. பச்சையாக பூண்டு சாப்பிடுவது, ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுவதுடன், கலோரிகளை எரிக்கவும் பயன்படுகிறது. இது உங்களை ஃபிட்டராக மாற்றுகிறது. பூண்டின் மற்றொரு நன்மை என்னவென்றால், அதன் பசியை அடக்கும் திறன் ஆகும். எனவே நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.

தக்காளி

தக்காளியில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், அவை உங்கள் எடையைக் கண்காணிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
தக்காளியின் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலின் நச்சுத்தன்மை மற்றும் எடை இழப்புக்கு ஏற்றதாக அமைகிறது.

தேங்காய்

ஆரோக்கியமாக இருக்க தேங்காய் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் வழியாகும். இது மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகளின் நன்மைகளால் நிரம்பியுள்ளது. இயற்கையின் இந்த பரிசு கொழுப்பை எரிக்க உதவுவதுடன், இதயத்தையும் பாதுகாக்கிறது. இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். செரிமானத்திற்கு உதவும் உயிரியக்க என்சைம்களையும் கொண்டுள்ளது.

குடைமிளகாய்

குடைமிளகாயை உங்கள் சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், உடல் எடையைக் குறைக்கவும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. சரியான உணவை உண்பது உங்கள் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே சரியான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

மேலும் படிக்க...

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை!

பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பன்ஸி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)