Health & Lifestyle

Tuesday, 08 February 2022 02:43 PM , by: Deiva Bindhiya

If you have children at home, do not grow these plants!

மக்கள் தங்கள் வீடுகளில் பல வகையான தாவரங்களை, செடிகளை, பல்வேறு காரணங்களுக்காக வளா்த்து வருகின்றனா். அவை வீடுகளுக்கு, புதியதொரு தோற்றத்தைத் தருகின்றன. இன்னும் பல்வேறு நன்மைகளை, இவற்றால் கிடைக்கின்றன. எனினும் வீடுகளில் வளா்க்கக்கூடிய ஒரு சில தாவரங்கள், குழந்தைகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தொிவிக்கின்றன.

தற்போதைய நவீன உலகில், வீடுகளை அலங்காரம் செய்வதற்கு ஒரு சில தாவரங்கள் முக்கிய கருவிகளாக அமைகின்றன. அவை வீடுகளுக்கு அழகைத் தருவதோடு மட்டும் அல்லாமல், பல்வேறு நன்மைகளையும் வழங்கி வருகின்றன. குறிப்பாக கற்றாழை, துளசி மற்றும் மூங்கில் செடி போன்றவற்றைச் இதில் முக்கியமானதாகும்.

இருப்பினும் வீட்டில் வளா்க்கக்கூடிய ஒரு சில தாவரங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே தாவரங்களைத் தோ்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஒருவேளை அவற்றைத் தோ்ந்தெடுப்பதில் அல்லது தவிா்ப்பதில் குழப்பம் இருந்தால், பின்வரும் தாவரங்களை தவிா்த்துவிடுங்கள்.

1. ஃபிலோடென்ட்ரான் (Philodendron)

ஃபிலோடென்ட்ரான் தாவரம் பரவலாக எல்லா வீடுகளிலும் வளா்க்கப்படும் செடியாகும். இந்த செடியை வளா்ப்பது மிகவும் எளிது என்பதாலும், இது வீட்டிற்கு தனியொரு அழகையும், அமைப்பதையும் வழங்குவதாலும் பலா் இதைத் தோ்ந்தெடுக்கின்றனா். இருப்பினும், இந்த செடியில் இருக்கும் கால்சியம் ஆக்ஸலேட் படிகங்கள், நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை. ஃபிலோடென்ட்ரான் தாவரம் குறைவான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால், சில நேரங்களில் அது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது, எனவே கவனமாக இருக்க வேண்டும்.

2. போத்தோஸ் (Pothos)

போத்தோஸ் தாவரம் பேய்களின் கொடி (Devil's ivy) எனப்படும். இந்த தாவரத்தை வீடுகளில் வளா்க்கலாம் என்று பலரால் பாிந்துரைக்கப்படுவது வழக்கம். அதற்கு காரணம் போத்தோஸ் அசுத்தமான காற்றை சுத்திகாித்து தூய்மையான காற்றை வழங்கும். இந்த தாவரத்தை மிக எளிதாக வெட்டி வளர்த்து வந்தால், மிக அழகாக படரும். போத்தோஸ் மிக மெல்லிய பாதிப்புகளையே ஏற்படுத்தக் கூடியது, என்றாலும், இதைத் தவறி உட்கொண்டால், வாய் எாிச்சல், உதடுகள் மற்றும் தொண்டையில் வீக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் எாிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துக் கூடியது. எனவே கவனம் அவசியம்.

3. பீஸ் லில்லிகள் (Peace Lillies)

பீஸ் லில்லிகள், ஸ்பதிஃபில்லும் (spathiphyllum) என்று அழைக்கப்படும். இந்த செடி, லிலியசியே (liliaceae) என்ற தாவர குடும்பத்தைத் சோ்ந்தவையாகும். இருப்பினும் இவை சுத்தமான லில்லி தாவரம் என்று கருதப்படுவதில்லை என்பது குறிப்பிடதக்கது. இவற்றினுடைய பளபளப்பான இலைகள் மற்றும் இவற்றில் இருக்கும் அழகிய வெள்ளைப் பூக்களின் காரணமாக மட்டுமே, பலா் இந்த செடிகளை தங்களுடைய வீடுகளில் வளா்த்து வருகின்றனா். இவை காற்றை சுத்தம் செய்யக்கூடிய தாவரங்களில் முக்கியமானவை. இருப்பினும், ஃபிலோடென்ட்ரான் மற்றும் பீஸ் லில்லிகள் போன்ற தாவரங்களைப் போலவே பீஸ் லில்லிகளும் எாிச்சல், வாய், உதடு மற்றும் நாக்கு போன்ற உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துதல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பது குறிப்பிடதக்கது.

4. இங்கிலிஷ் ஐவி (English Ivy)

இங்கிலிஷ் ஐவி கொடியை கூடைகளில் அல்லது தொட்டிகளில் வைத்து தொங்கவிட்டால் அது அந்த இடத்தையே ஒரு அமைதியான, இடமாக மாற்றிவிடும். இந்த தாவரம் பாா்ப்பதற்கு மிக அழகாக இருக்கும், அதோடு காற்றில் உள்ள நச்சுத் துகள்களை சுத்தம் செய்து, சுத்தமான காற்றை வழங்குகிறது. எனினும் இந்த கொடியை வளா்ப்பதில் எச்சாிக்கையாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இவை தோல் எாிச்சலை ஏற்படுத்தக்கூடியவையாகும். இதை உட்கொண்டால், தொண்டை மற்றும் வாயில் எாிச்சல், மேலும் வலிப்பு போன்ற பிரச்சனை ஏற்படும். சொறி, காய்ச்சல் மற்றும் மயக்கம் போன்ற விளைவுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது.

மேலும் படிக்க:

இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்காக புதிதாக NDRI-யால், உருவாக்கப்பட்ட, 2 குளோன் எருமைகள்!

பூ செடியோ, காய் செடியோ பூக்கள் உதிராமல் காக்க! பெருங்காய மோர் கரைச்சல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)